புதிய ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் கீழ் சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்படும் - மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை

Published By: Rajeeban

21 Jul, 2022 | 05:30 PM
image

புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ரணில்விக்கிரமசிங்கவின் கீழ் சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்படும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள மத்திய வங்கி ஆளுநர் புதிய ஜனாதிபதி சீர்திருத்தங்களின் வலுவான ஆதரவாளர் எனவும் தெரிவித்துள்ளார்.

சிஎன்பிசிக்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்

இலங்கையின் பொருளாதாரம் அடுத்த இரு மாதங்களில் 70வீதமாக அதிகரித்த பின்னர் செப்டம்பரில் குறைவடையும் என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 17வது சர்வதேச நாணய நிதிய திட்டத்தி;;ன் கீழ் சர்வதேச நாணயநிதியம் நிதியை வழங்க ஆரம்பித்ததும் உலகவங்கியும் ஆசியவங்கியும் மேலதிகமான நான்கு பில்லியன் டொலர்களை வழங்கலாம் என மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நெருக்கடி என்பது இலங்கையின் ஆட்சியாளர்களிற்கு ஒரு பாடம் எனவும் தெரிவித்துள்ள அவர் இந்த நெருக்கடி மூலம் கற்றுக்கொண்;ட  அனுபவம் காரணமாக சர்வதேச நாணயநிதியத்துடனான திட்டம் முடிவடைந்ததும் அவர்கள் சீர்திருத்தங்களை கைவிடக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

தி;ட்டங்கள் முடிவடைந்ததும் அதிகாரிகள் பின்னோக்கி நகர்வதையும் சிறந்த கொள்கைகளை கைவிடுவதையும் நாங்கள் பார்த்திருக்கின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

என்னை பொறுத்தவரை இது அதிகாரிகளிற்கு பாடங்களை கற்றுக்கொண்டு முன்னோக்கி சரியான திசையில் நகர்வதற்கான வாய்ப்பு  பொருளாதாரத்தை தொடர்ந்தும் பேண்தகுநிலையில் நிர்வகிப்பதற்கு இது எங்களிற்கு அவசியம் எனவும்அவர் தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ரணில்விக்கிரமசிங்கவின் கீழ் சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்படும் என நம்பிக்கை வெளியிட்டு;ள்ள மத்திய வங்கி ஆளுநர் புதிய ஜனாதிபதி சீர்திருத்தங்களின் வலுவான ஆதரவாளர் எனவும் தெரிவித்துள்ளார்.

புதிய ஜனாதிபதி சர்வதேச நாணயநிதியத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அர்ப்பணிப்பு தொடரும் என நாம் எதிர்பார்க்கின்றேன் விரைவில் அது சாத்தியமானால் அது சிறந்த விடயம்,அதன் காரணமாக நாங்கள் அனுபவிக்கின்ற துயரத்தின் காலத்தை குறைக்கலாம் என மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

அந்நிய செலாவணி நெருக்கடி அடுத்த சில மாதங்களிற்கு தொடரும் என மதிப்பிட்டுள்ள மத்திய வங்கி சர்வதேச நாணயநிதியத்துடன் உடன்பாடு ஏற்படும் வரை அது தொடரும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

இந்தியா ஜப்பான் சீனா பங்களாதேஸ் போன்ற நாடுகளிடமிருந்து கடன்களை பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளில் இலங்கை ஈடுபட்டுள்ளது என குறிப்பிட்டுள்ள நந்தலால்வீரசிங்க  இலங்கை சீனாவின் கடன்பொறிக்குள் சிக்குண்டுள்ளது என தெரிவிக்கப்படுவதை நிராகரித்துள்ளார்.

சீனாவினால் சிக்கவைக்கப்படுவது என்ற கருத்தினை நான் ஏற்க மாட்டேன்,சீனா மிக நீண்டகாலமாக இலங்கையில் முதலீடு செய்து உதவி வருகின்றது,இதன் காரணமாகவே நாங்கள் சீனாவிற்கு குறிப்பிடத்தக்க கடன்களை கொண்டுள்ளோம்,சீனாவின் திட்டங்கள் சிறந்தவை பொருளாதாரரீதியில் பலனளி;க்ககூடியவை என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47