ஆர்.யசி 

இலங்கை இந்திய  மீனவர் பிரச்சினையில் இணக்கப்பாடுகளுக்கு சாதகமாக டில்லி பேச்சுவார்த்தைகள் முடிவடைந்துள்ளன.

இதற்கு  இருதரப்பு பிரதிநிதித்துவம் கொண்ட கூட்டுச் சபை ஊடாக அடுத்தக்கட்ட தீர்வுக்கு இலங்கை இந்திய வெளிவிவகார அமைச்சர்கள் இணக்கம் தெரிவித்துள்ள  நிலையில் இந்தியா இழுவை படகை தடை செய்வதை ஏற்றுக்கொண்டுள்ளது.

மேலும் கைது செய்யப்பட்டுள்ள இருநாட்டு மீனவர்களை விடுவிக்கவும் மீனவ படகுகளை விடுவிக்காமல் இருக்கவும் இருதரப்பிலும் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. 

சர்வதேச கடல் எல்லையில் மீன்பிடியில் ஈடுபடுவதை தடுத்தல், மீனவர்களின் வாழ்வாதாரம், மற்றும் மீனவர் விவகாரத்தில் இலங்கை இந்திய இரு நாட்டு கடற்படையினரின் நடவடிக்கைகள் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பது குறித்து ஆராயும் வகையில்  டில்லியில் இரு நாட்டு வெளியுறவு, மீன்வளத்துறை  அமைச்சர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் இன்று சனிக்கிழமை நடைபெற்றது.