புதிய ஜனாதிபதியின் தெரிவு ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி - அசாத் சாலி !

Published By: Vishnu

20 Jul, 2022 | 05:25 PM
image

நாட்டின் எட்டாவது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவை பாராளுமன்றம் தெரிந்தெடுத்திருப்பது ஜனநாயகத்துக்கு கிடைத்த பெரும் வெற்றியென தேசிய ஐக்கிய முன்னணி தலைவரும் மேல்மாகாண முன்னாள் ஆளுநருமான அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வாழ்த்தி, அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

"முதிர்ந்த அரசியல் அனுபவமுள்ள புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பல பாதைகளை கடந்து வந்தவர். அரசியலில் எத்தனை சவால்களை எதிர்கொள்ள நேர்ந்த போதும், ஒருநாளும் அவர் ஜனநாயகத்தை விட்டுக்கொடுத்ததில்லை.

முக்கியமான காலகட்டத்தில் பல தியாகங்கள் செய்து நாட்டையும், மக்களையும் பாதுகாத்த பெருமை அவருக்குண்டு.

அதுமட்டுமல்ல நெருக்கடியான நேரங்களில்கூட துணிந்து நின்று பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்ட அவரது முன்னுதாரணம், அரசியல் முதிர்ச்சியையே காட்டுகிறது.

வாதத்திறமையும், வாக்குறுதி மீறாத நேர்மையும் தான் அவரை இந்தளவு உயர்த்தியிருக்கிறது.

சர்வதேசத்தில் அவருக்குள்ள செல்வாக்கினால் நமது நாட்டு நெருக்கடிகளை தீர்ப்பதற்கான வியூகங்களை வகுப்பார் என்ற நம்பிக்கை எனக்குமட்டுமல்ல, பாராளுமன்றத்துக்கும் உள்ளது. இந்த நம்பிக்கைதான் அவரை இன்றைய வாக்கெடுப்பில் வெற்றியீட்ட வைத்துள்ளது.

வென்றகையோடு சகல கட்சிகளையும் ஒத்துழைக்குமாறு புதிய ஜனாதிபதி அழைத்திருப்பது ஜனநாயகவாதிக்குள்ள பண்பையே எடுத்துக்காட்டுகிறது.

எனவே, இனியாவது அரசியல் பேதங்களை மறந்து, நமது நாட்டு நெருக்கடியை தீர்க்க சகலரும் புதிய ஜனாதிபதியுடன் கைகோர்க்க வேண்டும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44