பிரித்தானிய அமைச்சர் நாளை இலங்கை வருகின்றார்

Published By: Robert

05 Nov, 2016 | 03:50 PM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஐ.நா மற்றும் பொதுநலவாய விவகாரங்களுக்கான பிரித்தானிய அமைச்சர் பரோனஸ் அனெலி  நாளை இலங்கைக்கு வருகின்றார். இனமோதல்களில் பாலியல் வன்முறைகள் தொடர்பான பிரித்தானிய பிரதமரின் விஷேட பிரிதிநியாகவும் அமைச்சர் பரோனஸ் அனெலி பணியாற்றுகின்றார். 

பதவி காலத்தில் முதன்முறையாக இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் அமைச்சர் பரோனஸ் அனெலி எதிர்வரும் புதன்கிழமை வரை நாட்டில் தங்கியிருந்து பலதரப்பட்ட அரச மட்ட சந்திப்புகளில் ஈடுப்பட உள்ளதுடன் நாளை மறுநாள் செவ்வாய்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். 

இந்தப் விஜயத்தின்போது, மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தைப் பலப்படுத்துதல், நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் மற்றும் ஊழலுக்கு எதிரான இலங்கையின் முன்னெடுப்புகள்  தொடர்பாக  பிரித்தானிய அமைச்சர் பரோனஸ் அனெலி கவனத்தில் கொள்ளவுள்ளார். 

இவை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோருடன் கலந்துரையாட உள்ளதுடன் எதிர் கட்சி தலைவர் இரா. சம்பந்தன் உள்ளிட்ட  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களையும் சந்திக்க உள்ளார். 

நாளை மறுநாள் செவ்வாய் கிழமை யாழ்ப்பாணம் செல்லவுள்ள பிரித்தானிய அமைச்சர் வடமாகாண ஆளுனர் மற்றும் முதலமைச்சரையும் சந்தித்து கலந்துரையாட உள்ளார். 

மேலும் பிரித்தானிய நிதியுதவியில் முன்னெடுக்கப்பட்ட மிதிவெடி அகற்றிய பகுதிகள் மற்றும் அங்கு மீள் குடியமர்த்தப்பட்ட மக்களையுத் சந்திக்க உள்ளார்.  அத்துடன்  சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் நல்லிணக்கம் மற்றும் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பாக அமைச்சர் பரோனஸ் அனெலி பேச்சுக்களில் ஈடுபடவுள்ளளுடன் பயணத்தில் இறுதியில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08