சுதந்திர கட்சி வாக்களிப்பில் கலந்துகொள்ளும் - அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு

Published By: Digital Desk 5

19 Jul, 2022 | 09:10 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்.இராஜதுரைஹஷான்)

போட்டியின்றி ஜனாதிபதி, பிரதமர் தெரிவு செய்யப்படுவதே மிகவும் சிறந்தது அவ்வாறானால் அது முழு உலகக்கும் முன்னுதாரணமாக அமையும். ஸ்ரீலங்கா சுதந்திர கடசி இந்த தேர்தலில் வாக்களிகும் என என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்

பாராளுமன்ற வளாகத்தில் (19) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே  இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொரடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

இடைக்கால ஜனாதிபதிப் பதவிக்கு மூவரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதால்,  அரசியல் கட்சிகளுக்குள் பிளவுகள் ஏற்பட்டுள்ளன. இது நாட்டுக்கும் பாராளுமன்றத்துக்கும் நல்ல விடயமல்ல.

 ஜனாதிபதிப் பதவிக்கு முன்மொழியப்பட்ட மூவரும் கலந்துரையாடி போட்டியில்லாது ஜனாதிபதி, பிரதமரைத் தெரிவு செய்வதே சிறந்தது.

நாட்டு மக்களின் எதிர்பார்ப்பும் அதுவாகவே உள்ளது .

 பாராளுமன்றத்தில் இன்று  நடைபெறவுள்ள ஜனாதிபதி தெரிவின்போது எவருக்கு வாக்களிப்பது என்பது தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இதுவரையில் இறுதித் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை. ஆரம்பத்தில் வாக்களிப்பில் கலந்துகொள்வதில்லை என தெரிவிக்கப்பட்டபோதும் தற்போது வாக்களிப்பதற்கே இணக்கப்பாட்டுக்கு வந்திருக்கின்றது.

சுதந்திரக் கட்சிக்குள் வாக்கெடுப்பைப் புறக்கணிப்பதற்கும், வாக்களிக்க வேண்டும் என இரு நிலைப்பாடுகள் நிலவுகின்றன.

அதற்கிணங்க  மனசாட்சியின்படியே வாக்களிக்க வேண்டும்.  எவருக்கு வாக்களிப்பது என்பது தொடர்பில் இதுவரையில் நான் தீர்மானிக்கவில்லை. தீர்மானம் ஒன்றுக்கு வருவதற்கு அதிக காலம் செல்லாது. 

நால்வர் போட்டியிடப்போவதாக முன்பு தெரிவிக்கப்பட்டது .அது மூன்றாக தற்போது குறைவடைந்துள்ளது. இன்னும் ஒன்று அதிலிருந்து குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அவ்வாறு குறைவதற்கான பேச்சுக்களும்  அடிபடுகின்றன.

 அதன் பிரகாரம்  இன்று இடைக்கால ஜனாதிபதி முன்மொழியப்பட்டுள்ள பெயர்களிலிருந்து ஒருவர் விலகுவதற்கான வாய்ப்பும் காணப்படுகிறது.

 போட்டியில்லாது ஜனாதிபதி, பிரதமரை தெரிவு செய்வதே சிறந்தது. அவ்வாறு செயற்பட்டால் உலகுக்கும், நாட்டுக்கும் முன்ணுதாரணமாக அது அமையும். எவ்வாறெனினும் ஜனாதிபதி தெரிவுக்கு மூவரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதால் அரசியல் கட்சிகள் பலவற்றில் பிளவுகள் ஏற்பட்டுள்ளமை இதில் துரதிஷ்டமானதாகும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59