காலம்­சென்ற இசை­ய­மைப்­பா­ளரும் பாட­க­ரு­மான பண்டித் அம­ர­தே­வவின் மரணத்துக்கு மாலைத்தீவு ஜனாதிபதி அப்துல்லாயாமீன் அப்துல்கயூம் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

பண்டித் அம­ர­தே­வ  இலங்கையில் மாத்திரமின்றி மாலைத்தீவிலும் ஒரு கலைஞராக போற்றப்படுகின்றார்.

மாலைத்தீவின் தேசிய கீதத்துக்கு இசையமைத்து கொடுத்ததனூடக அவரை மாலைத்தீவு மக்கள் உயரிய அந்தஸ்துடன் பார்க்கின்றனர் எனவும் அவர் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.