'ஐ ஹேட் யூ' சொன்னால் அலட்சியம் காட்டாதீர்கள்!

Published By: Vishnu

19 Jul, 2022 | 07:08 PM
image

இப்போது குழந்தைகள் அர்த்தம் பொதிந்த வார்த்தைகளை, அர்த்தம் தெரியாமலேயே மிக எதேச்சையாக சொல்லிவிடுகிறார்கள். 

'ஐ ஹேட் யூ' (நான் உன்னை வெறுக்கிறேன்) ~கோ அவுட்| (வெளியே போ) ~கில் யூ| (உன்னை கொல்வேன்) என்றெல்லாம் அவர்கள் கூறுகிறபோது பெற்றோரும் மற்றவர்களும் மழலை பேச்சில் மயங்கி ரசிக்கிறார்கள். சிரிக்கிறார்கள். ஆனால், இவை மிக ஆபத்தான சொற்கள், மறந்துவிடாதீர்கள்.

குழந்தைகள் அர்த்தம் தெரியாமல் சொன்னாலும், ஏதோ ஒன்றின் மீது அல்லது யாரோ ஒருவர் மீது ஏற்படும் சிறு வெறுப்பையே இதுபோன்ற வார்த்தைகளால் வெளிப்படுத்துகின்றனர் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

~ஐ ஹேட் யூ| என ஒருவரை பார்த்து உங்கள் குழந்தை சொல்கிறதென்றால், அதை ரசிக்கவோ குழந்தையை திட்டவோ வேண்டாம். குழந்தையின் தலையை தடவி, அரவணைத்து அதனிடம் அன்பாக கதையாடுங்கள்... அதன் மனநிலையை புரிந்துகொள்ளுங்கள். 

கொஞ்சம் பேச தெரிந்த குழந்தை என்றால்,  மெல்ல பேச்சு கொடுத்துப் பாருங்கள்... ஒருவேளை குழந்தை தன் வெறுப்புக்குரிய நபர் செய்த ஏதேனும் ஒரு முறையற்ற செயலை உங்களிடம் அறைகுறையாகவேனும் சொல்லக்கூடும். 

அதுதான் நீங்கள் விழித்துக்கொள்ளும் நேரம். தொடர்ந்து குழந்தையை, அதன் வெறுப்புக்குரிய நபரை கண்காணியுங்கள்... உங்கள் குழந்தை பாதுகாக்கப்படும்!

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்