கொலுசு சிந்தனையை சிதறடிக்கிறதா?

Published By: Digital Desk 5

19 Jul, 2022 | 07:07 PM
image

பெண்களுக்கு ஆடை, அணிகலன்கள் மேல் உள்ள ஆசை எப்படி வருகிறது? காலம் காலமாக பெண் என்பவள் அழகாக இருக்க வேண்டும் என்று ஆண், பெண் இருவர் மண்டைக்குள்ளும் ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது.

பூ, கொலுசு, வளையல், மூக்குத்தி, ஜிமிக்கி, பொட்டு, தோடு, சங்கிலி, மாலை, உடை என எல்லாவற்றிலும் அப்போதைய ஃபெஷனை பின்பற்ற வேண்டிய கட்டாயத்துக்கு பெண்கள் தள்ளப்படுகிறார்கள். உன் ஆளுமைத் திறனால் கம்பீரமாக இருப்பதுதான் உண்மையான அழகு என்று யாரும் அவளுக்குச் சொல்லித் தருவதில்லை.

இயல்பாகவே இம்மாதிரி விடயங்களில் கவனம் செலுத்தாத பெண்களைக் கூட சீண்டி, கிண்டல் அடித்து, 'வழி'க்குக் கொண்டுவரப் பார்க்கின்றன சுற்றமும் தோழமையும்.

ஆண் கொலுசால், பூவால், இவற்றை அணிந்த பெண்ணால் கவரப்படுகிறான். பெண் இவற்றை பிரதானமாக நினைக்கும்படி வளர்க்கப்படுகிறாள்.

வளரிளம் பருவத்தில் இருக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் பாலியல் உணர்வுகளை கையாள கற்றுக் கொடுக்க வேண்டும். பெண்களின் உலகம் அலங்காரத்துக்கு மட்டுமானது அல்ல. ஆளுமைப் பண்புகளால் நிரப்பப்பட வேண்டியது என்ற பார்வையை ஆணும் பெண்ணும் பெற்றோரும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right