நேர்மையாக நடந்த முச்சக்கர வண்டி சாரதிக்கு நோர்வே தூதரகம் பாராட்டு 

Published By: Ponmalar

05 Nov, 2016 | 11:51 AM
image

நோர்வேயிலிருந்து  இலங்கை வந்த மாணவி ஒருவர் முச்சக்கர வண்டியில்  தொலைத்த பயணப்பையை  முச்சக்கர வண்டி சராதி தேடிப்போய் வழங்கிய சம்பவமொன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு நேர்மையான நடத்தையை வெளிக்காட்டிய முச்சக்கர வண்டி சாரதியான பிரான்ஸிஸ்க்கு நோர்வே தூதரகம் நன்றி தெரிவித்துள்ளதுடன், தங்களது பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளது.

எஸ்.எஸ் சோலன்டட் என்ற உலகின் பழமை வாய்ந்த கப்பலில் கடந்த சனிக்கிழமை  இலங்கைக்கு வந்த பெண்ணொருவர்  முச்சக்கர வண்டியொன்றில் தனது பயணப்பையை விட்டுச்சென்றுள்ளார்.

குறித்த பையினை துறைமுக அதிகாரசபை மற்றும்  கப்பல் துறை முகவர்கள் இணைந்து தேடியும் குறித்த பை கிடைக்கவில்லை.

இந்நிலையில் குறித்த கப்பல் அடுத்தநாள் காலை  மாலைத்தீவு செல்ல வேண்டிய கட்டயாம் காணப்பட்டதால், தனது பையை தொலைத்தவாறு குறித்த நோர்வே மாணவி மாலைத்தீவு சென்றுவிட்டார்.

எனினும் முச்சக்கர வண்டி சாரதியான பிரான்ஸிஸ் தனது முயற்சியினை விடாது ஹோட்டல்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் சாரதிகளிடம் குறித்த நோர்வே பெண் குறித்து விசாரித்துள்ளார்.

ஒருவாறு நோர்வே தூதரகத்துக்கு குறித்த விடயத்தை தெரிவித்த சாரதி, பையை தூதரகத்தில்  கையளித்துள்ளார்.

இந்நிலையில் தூதரகத்தின் ஊழியர் ஒருவர் பை கிடைத்ததற்கு அடுத்தநாள் மாலைத்தீவு செல்லவிருந்த நிலையில், குறித்த ஊழியரிடம் பை கொடுக்கப்பட்டதுடன், அது  மாலைத்தீவில் வைத்து பை நோர்வே பெண்ணிடம் ஒப்படைக்கப்பட்டது.

முச்சக்கர வண்டி சாரதியான  பிரான்ஸிஸ் தனக்கு கிடைத்த பெறுமதியான பையை எந்தவித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் உரிய பெண்ணிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற எண்ணம் மற்றும் நேர்மையான குணம் நம் எல்லோருக்கும் ஒரு சிறந்த முன்னுதாரணமாகும்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27