காலம்­சென்ற இசை­ய­மைப்­பா­ளரும் பாட­க­ரு­மான பண்டித் அம­ர­தே­வவின் பூத­வுடல் மக்கள் அஞ்­ச­லிக்­காக கொழும்பு சுதந்­திர சதுக்­கத்தில் வைக்­கப்­பட்­டுள்­ளது. இதே­வேளை, பண்டித்  அம­ர­தே­வவின் இறு­திக்­கி­ரி­யைகள் இன்று நடை­பெ­ற­வுள்­ளது.

இதனை முன்னிட்டு இன்று கொழும்பு சுதந்திர சதுக்க வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை 7.00 மணி முதல் இந்த ­கட்டுப்பாடு நடைமுறையில் உள்ளதாகவும் அனுமதி பெற்ற வாகனங்கள் மட்டுமே சுதந்திர சதுக்க வீதியில் பிரவேசிக்க முடியும் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் ஏற்படக்கூடிய வாகன நெரிசலை தவிர்த்துக்கொள்ள இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

குறித்த பாதையை பயன்படுத்தும் பொதுமக்கள் மற்றும் வாகன சாரதிகள், மாற்று வழிகளை பயன்படுத்தி வாகன நெரிசலை குறைத்துக்கொள்ளுமாறு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.