நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டும் என 70 சதவீதமான இலங்கையர்கள் விரும்புகிறார்கள்

Published By: Digital Desk 3

18 Jul, 2022 | 04:55 PM
image

நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை நாட்டின் சனத்தொகையில் 70 சதவீதமானவர்கள் (+/- 2%) கொண்டுள்ளதாக வெரிட்டே ரிசேர்ச்சால் முன்னெடுக்கப்பட்ட ஜுன் 2022 ஒருங்கிணைக்கப்பட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

15 சதவீதமானவர்கள் மட்டும் நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையை ஒழிக்கக்கூடாது எனத் தெரிவித்துள்ளனர்.

மீதமுள்ள 15 சதவீதமானவர்கள் வேறு பல கருத்துக்களைக் கொண்டுள்ளனர் (முழுமையாக ஒழிப்பதற்குப் பதிலாக அதிகாரங்களைக் குறைத்தல் போன்றவை) அல்லது கருத்தைத் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

அனைத்து வயதினரும் இதே மாதிரியான கருத்தையே முன்வைத்துள்ளனர். தெற்கு, கிழக்கு, வடக்கு ஆகிய மாகாணங்களிலும் இதே கருத்தே முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த மாகாணங்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தனர். 

கணக்கெடுப்பை நடைமுறைப்படுத்துதல் 

வெரிட்டே ரிசேர்ச் மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட கணக்கெடுப்பு கருவியின் ஒரு பகுதியாக இந்த வாக்கெடுப்பு முன்னெடுக்கப்பட்டது. இது பிற நிறுவனங்களும் இலங்கையின் மனநிலையை ஆராய்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இந்த வாக்கெடுப்பு நாடு தழுவிய தேசிய ரீதியிலான பிரதிநிதித்துவத்தைக் கொண்ட மாதிரி பதில்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. 

இதற்காக ஜுன் 2022ல் 18 வயதுக்கு மேற்பட்ட 1,052 இலங்கையர்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மாதிரி மற்றும் வழிமுறையில் அதிகபட்ச பிழைக்கான வரம்பு 3 சதவீதத்தை விடக் குறைவாகவும், நம்பக இடைவெளி 95 சதவீதமாக இருப்பதையும் உறுதிசெய்யும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. வாக்கெடுப்புக்கான பங்காளர் வான்கார்ட் சர்வே (பிரைவட்) லிமிடெட் (Vanguard Survey (Pvt) Ltd) ஆகும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22