அவன்கார்ட் மிதக்கும் ஆயுத களஞ்சியம் அடங்கிய கப்பலின் கெப்டனான உக்ரைன் பிரஜை கெனாட் குரொரிலோவிற்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

காலி நீதவான் நீதிமன்றத்தில் எவன்கார்ட் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

காலி சிறைச்சாலையில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள அவன்கார்ட் மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை கப்பலின் கெப்டன் உக்ரைன் பிரஜை கெனாட் குரொரிலோ  காலி நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்காக ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

இதன் போது எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு காலி நீதவான் நிலுபூலி லங்காபுர உத்தரவிட்டார். சட்ட விரோதமாக ஆயுதங்களை ஏற்றிச் சென்ற குற்றச் சாட்டில் அவன்கார்ட் கெப்டன் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.