இலங்கையில் ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு அமைய மிக விரைவில் அரசியல் தீர்வு கிடைக்கப்பெற இந்தியா ஆதரவு

15 Jul, 2022 | 09:06 PM
image

(நா.தனுஜா)

இலங்கையில் ஜனநாயகக்கோட்பாடுகளுக்கும் அரசியலமைப்பிற்கும் அமைவாக மிகவிரைவாக அரசியல் தீர்வு அடைந்துகொள்ளப்படுவதற்கு இந்தியா முழுமையான ஆதரவை வழங்கும் என்று இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்திருக்கின்றது.

 அதுமாத்திரமன்றி முன்னாள் ஜனாதிபதி இலங்கையிலிருந்து வெளியேறுவதற்கோ அல்லது பயணிப்பதற்கோ ஏதேனுமொரு வகையில் இந்தியா உதவியதாக வெளியாகும் தகவல்களை முற்றாக மறுப்பதாகவும் உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்திருக்கின்றது.

 அதேவேளை ஜனநாயகக்கோட்பாடுகள், ஜனநாயகக்கட்டமைப்புக்கள் மற்றும் அரசியலமைப்பு என்பவற்றுக்கு அமைவாக சுபீட்சம் மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றை இலக்காகக்கொண்ட மக்களின் அபிலாஷைகள் அடைந்துகொள்ளப்படுவதை முன்னிறுத்தி இந்தியா எப்போதும் இலங்கை மக்களுடன் உடன்நிற்கும் என்றும் உயர்ஸ்தானிகராலயம் மீள உறுதிப்படுத்தியுள்ளது.

வியாழக்கிழமை (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்ட இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர், இலங்கையில் அரசாங்கம் மற்றும் அதன் தலைமைத்துவம் ஆகியவற்றுடன் தொடர்புபட்ட நிலைவரங்களுக்கு ஜனநாயகக்கோட்பாடுகள், ஜனநாயகக்கட்டமைப்புக்கள் மற்றும் அரசியலமைப்பு ஆகியவற்றுக்கு அமைவாக வெகுவிரைவில் தீர்வு எட்டப்படுவதை இந்தியா எதிர்பார்ப்பதாகத் தெரிவித்திருந்தார் என்று தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கும் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம், முன்நோக்கிப்பயணிப்பதற்கு விரும்பும் இலங்கை மக்களுக்கு இயலுமான அனைத்து வழிகளிலும் உதவுவதற்குத் தயாராக இருப்பதாக இந்தியா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் உறுதியளித்ததாகவும் தெரிவித்திருக்கின்றது.

 

இலங்கையில் தற்போது மேலோங்கிவரும் சவால்களுக்குத் தீர்வுகாணும் வகையில் இந்தியாவினால் இலங்கை மக்களுக்கு வழங்கப்பட்ட உதவிகள், இந்தியாவின் 'அயலகத்திற்கு முதலிடம்' மற்றும் பிராந்தியத்திலுள்ள அனைத்து நாடுகளுக்கும் பாதுகாப்பும் அபிவிருத்தியும் (சாகர்) ஆகிய கொள்கைகளை அடிக்கோடிட்டுக்காண்பிக்கும் வகையில் அமைந்திருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் இந்திய உயர்ஸ்தானிகராலயம், இலங்கை மக்களுடனான ஒருமைப்பாடும் அவர்களுக்கான ஆதரவும் தொடரும் என்றும் குறிப்பிட்டிருக்கின்றது.

 

மேலும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இலங்கை மக்களுக்கு உதவும் நோக்கில் 3.8 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உதவிகளை இந்தியா வழங்கியுள்ளமை தொடர்பில் அந்நாட்டு வெளிவிவகாரப்பேச்சாளர் சுட்டிக்காட்டியதாகத் தெரிவித்திருக்கும் உயர்ஸ்தானிகராலயம், முன்னாள் ஜனாதிபதி இலங்கையிலிருந்து வெளியேறுவதற்கோ அல்லது பயணிப்பதற்கோ ஏதேனுமொரு வகையில் இந்தியா உதவியதாக வெளியாகும் தகவல்களை முற்றாக மறுப்பதாகவும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44