துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள மறுத்த இராணுவ அதிகாரி அதிரடியாக நீக்கம்

15 Jul, 2022 | 09:21 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

கொள்ளுபிட்டி, பிளவர் வீதி - பிரதமர் அலுவலகத்தினை சூழ்ந்து அதனை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்த போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடாத்த மறுத்த, அப்பகுதியின் பாதுகாப்புக்கு பொறுப்பாக செயற்பட்ட கொழும்பு 112  ஆம்  படையணியின் கட்டளை தளபதி பிரிகேடியர்  அனில் சோமவீர  பொறுப்புக்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.  

கட்டளை தளபதி பொறுப்புக்களில் இருந்து நீக்கப்பட்ட அவர் இராணுவ தலைமையகத்துக்கு  மீள அழைக்கப்பட்டுள்ளார்.

 பதில் ஜனாதிபதியாக  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று ( 15)  பதவியேற்று சில மணி நேரத்துக்குள்ளேயே இந்த  விடயம் பதிவாகியுள்ளது.

 இதனைவிட,  பிரிகேடியர் சோமவீரவுடன் அருகே இருந்தவாறு பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்ட  இராணுவத்தின் சிங்க ரெஜிமென்ட்டின் 12 ஆவது  உப படையணியின் கட்டளை அதிகாரி  லெப்டினன் கேர்ணல் பி.எச்.ஜீ.பி. குணவர்தனவும் கடமைகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

 கடந்த 13 ஆம் திகதி, பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பிரதமர் அலுவலகம் முன்பாக போராட்டக்காரர்கள்  பாரிய போராட்டத்தை முன்னெடுத்தனர். இதன்போது அவர்கள் பிரதமர் அலுவலகத்தை தமது பொறுப்பிலும் கொண்டு வந்தனர்.

 இந்த போராட்டத்தின் இடையே, பாதுகாப்புத் தரப்புக்கு போராட்டக் காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடாத்த அனுமதியளிக்கப்பட்டது.

 எனினும்  ஸ்தலத்தின் பாதுகாப்புக்கு பொறுப்பாக இருந்த பிரிகேடியர் சோமவீர, பொது மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடாத்த மறுத்திருந்தார்.

 இவ்வாறான நிலையிலேயே அவர் உள்ளிட்ட அங்கு கடமைகளில் பொறுப்பாக இருந்த உயர் அதிகாரிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 இது குறித்து விசாரணைகளை முன்னெடுத்து, அவர்கள் கடமைகளில் இருந்து நீக்கப்பட, துப்பாக்கிச் சூடு முன்னெடுக்காமை குறித்த விடயம் காரணமா என வெளிப்படுத்தி, விடயத்தில் தலையீடு செய்யுமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவிடம் இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் முறைப்பாடளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36