மக்களே அவதானம் : ஆடையின்றி விசித்திரமான கொள்ளை - பொகவந்தலாவையில் சம்பவம்

Published By: Robert

04 Nov, 2016 | 04:28 PM
image

Image result for தங்க நகைகள் கொள்ளை

குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து தாயை அச்சுறுத்தி இரண்டரை பவுன் பெறுமதியான தங்க மாலைவொன்றை கொள்ளையிட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இன்று விடியற்காலை 2.45 மணியளவில் பொகவந்தலாவை கெர்க்கஸ்வோல்ட் மத்திய பிரிவு தோட்டத்திலே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வீட்டில் தாய் தனது 10 மாத குழந்தை மற்றும் 6 வயது மகனோடு நித்திரையில் இருந்துள்ளார். 

இவ்வேளையிலேயே, வீட்டின் கதவை உடைத்து கொண்டு உட்பகுந்த திருடன் தங்க மாலையை களவாடி சென்றுள்ளதாகவும் குறித்த திருடன் ஆடையின்றி முகத்தை மாத்திரம் கறுப்பு துணியால் மறைத்து கொண்டு வந்துள்ளதாகவும்  பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

குறித்த பெண்ணின் கணவர் இரவு வேலைக்கு சென்றதன் பிறகே இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கபடுகிறது. 

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொகவந்தலாவ பொலிஸார் மோப்ப நாய்களை பயன்படுத்தி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ள நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பொகவந்தலாவ நிருபர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56