கோட்டாபயவின் வருகையும் வெளியேற்றமும்

Published By: Vishnu

15 Jul, 2022 | 12:26 PM
image

(எம்.மனோசித்ரா)

அரசியலில் நேரடி பங்கேற்பற்ற இராணுவ பின்புலத்தைக் கொண்ட இலங்கையின் 7 ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ , மக்களின் தன்னெழுச்சி போராட்டங்களின் அழுத்தத்தினால் இராஜினாமா செய்துள்ளார். அவரது உத்தியோகபூர்வ பதவி விலகல் கடிதம் தனக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக சபாநாயகர் மஹிந்தயாபா அபேவர்தனவால் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ 69 இலட்சத்து 24 ஆயிரத்து 255 விருப்பு வாக்குகளால் பாரிய வெற்றியைப் பெற்றுக் கொண்டார். இவர் பெற்றுக் கொண்ட விருப்பு வாக்குகள் நூற்றுக்கு 52.25 சதவீதமாகும். இலங்கை வரலாற்றில் 1982 முதல் 2015 வரை இடம்பெற்றுள்ள 7 ஜனாதிபதி தேர்தல்களில் வெற்றி பெற்ற வேட்பாளர்களை விட , 2019 இல் இடம்பெற்ற 8 ஆவது ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ பெற்றுக் கொண்ட வாக்குகளே அதிகூடிய வாக்குகளாகப் பதிவாகியுள்ளன.

இராணுவத்தில் முக்கிய பதவிகளை வகித்த இவரே இலங்கையில் இராணுவ பின்புலம் கொண்ட முதலாவது ஜனாதிபதியாகவும் காணப்பட்டார். ஆரம்ப கால கட்டத்திலேயே இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று அமெரிக்கா சென்ற இவர் , 2005 இல் தனது சகோதரரான மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட போது பாதுகாப்பு செயலாளராகவும் பதவி வகித்தார். 2015 ஆட்சி மாற்றத்தின் பின்னர் செயற்பாட்டு அரசியலிலிருந்து சற்று விலகிருந்த போதிலும் , 2019 ஜனாதிபதித் தேர்தலில் பாரிய வெற்றியைப் பெற்றுக் கொண்டார்.

தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார அபிவிருத்தி என்பவையே இவரின் தேர்தல் கொள்கை பிரகடனத்தில் பிரதான விடயங்களாகக் காணப்பட்டன.

எவ்வாறிருப்பினும் முறையற்ற பொருளாதார அணுகுமுறைகளாலும் , பொறுத்தமற்ற தீர்மானங்களாலும் வங்குரோத்தடைந்த நாடாக இலங்கை வீழ்ச்சியடை இவரது ஆட்சி காரணமாக அமைந்துள்ளது. 69 இலட்சத்திற்கும் அதிக மக்களின் விருப்பினைப் பெற்ற இவர் , ஒட்டுமொத்த நாட்டு மக்களின் வெறுப்பிற்குள்ளாகி அவர்களின் அழுத்தத்தினால் பதவியை இராஜிநாமா செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இதன் காரணமாக பதவி காலம் நிறைவடைவதற்கு முன்னரே தனது பதவியை இராஜிநாமா செய்த முதலாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாகவும் கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை அரசியல் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். இவரால் எடுக்கப்பட்ட தீர்மானங்களால் விவசாயிகள் முதற்கொண்டு எவ்வித பாரபட்சமும் இன்றி சகல மக்களும் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். நெருக்கடிகளால் ஆத்திரமடைந்த மக்களினதும் , இலங்கை அரசியல் முறைமையில் மாற்றத்தினை எதிர்பார்க்கும் இளம் தலைமுறையினரின் அமைதியான தன்னெழுச்சி போராட்டங்களும் கோட்டாபய ராஜபக்ஷவை பிரிதொரு நாட்டிலிருந்து பதவி விலகலை அறிவிக்கச் செய்யுமளவிற்கு கொண்டு சென்றன.

ஒரு நாட்டை நிர்வகிக்கக் கூடாது என்றும் , அடுத்து வரும் ஆட்சியாளர்கள் எந்தளவிற்கு பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று சகல அரசியல்வாதிகளுக்கும் இவரது பதவி விலகலானது சிறந்த பாடத்தைக் கற்பித்துக் கொடுத்திருக்கிறது. இந்த  பதவி விலகலால் நாட்டிலுள்ள பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு கிடைக்கப் போவதில்லை என்றாலும் , இவை அனைத்திற்குமான பொறுப்பு கூறலிலிருந்து கோட்டாபய ராஜபக்ஷ தப்பியுள்ளார் என்பதே பெரும்பாலானோரின் நிலைப்பாடாகவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13