பிரிட்டன் பிரதமர் தேர்தல் : தொடர்ந்து முன்னிலையில் ரிஷி சுனக்

Published By: Digital Desk 3

15 Jul, 2022 | 11:25 AM
image

இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் பிரிட்டனில் புதிய பிரதமருக்கான  முதல் சுற்றை தேர்தலை தொடர்ந்து இரண்டாம் சுற்றிலும் 101 வாக்குகள் பெற்று வெற்றியாளராக முன்னிலையில் உள்ளார்.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாகவும், புதிய பிரதமர் தெரிவுசெய்யப்படும் வரை இடைக்கால பிரதமராகப் பதவியில் நீடிப்பதாகவும் அறிவித்திருந்தார். 

அதிலிருந்து பிரிட்டன் அரசியல் களத்தில் பரபரப்பு உச்சத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில், கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் மற்றும் பிரிட்டன் பிரதமருக்கான தேர்தல் நடைபெற்றுவருகிறது.

இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் முதல் சுற்று வாக்கெடுப்பில் 88 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார். அதைத் தொடர்ந்து இரண்டாம் கட்டத் தேர்தல் நேற்று நடைபெற்றது. அதிலும் ரிஷி சுனக் தொடர்ந்து 101 வாக்குகள் பெற்று வெற்றியாளராக முன்னிலையில் தொடர்கிறார். 

அவரைத் தொடர்ந்து, வர்த்தக அமைச்சர் பென்னி மோர்டான்ட் 83 வாக்குகளும், வெளியுறவுச் செயலர் லிஸ் ட்ரஸ் 64 வாக்குகளும், முன்னாள் அமைச்சர் கெமி படேனோக் 49 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், ரிஷி சுனக் டுவிட்டர் பக்கத்தில், தனது ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்து, ``என்னிடம் உள்ள அனைத்தையும் நம் தேசத்திற்கு வழங்க தயாராக உள்ளேன். நாம் ஒன்றாக நமது நம்பிக்கையை மீட்டெடுக்கலாம், நமது பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பி நாட்டை மீண்டும் ஒன்றிணைக்கலாம்" எனப் பதிவிட்டுள்ளார்.

இந்தத் தேர்தல் களம் அடுத்த வார இறுதிக்குள் இரண்டு வேட்பாளர்கள் என்றளவில் இறுதிசெய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, பின்னர் 1,60,000 டோரி உறுப்பினர்கள் அடுத்த கட்சித் தலைவர் மற்றும் பிரதமராக எந்த வேட்பாளராக வர வேண்டும் என்று முடிவுசெய்வார்கள். இந்தத் தேர்தல் முடிவுகள் செப்டம்பர் 5ஆம் திகதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10