இலங்கை தொடர்பான சர்வதேச நாணயநிதியத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்தியா செயற்படலாம் - நாணயநிதியத்தின் முன்னாள் பொருளாதார நிபுணர்

Published By: Rajeeban

15 Jul, 2022 | 10:43 AM
image

சர்வதேச நாணயநிதியத்தின் முன்னாள் பொருளாதார நிபுணர் சேர்கி லனோ (Sergi Lanau) தற்போது ஐஐஎவ் அமைப்பின் பொருளாதார ஆராய்ச்சி திணைக்களத்தில் பணியாற்றுகின்றார்,

இலங்கையின் பொருளாதார நிலையை உன்னிப்பாக அவதானித்த அவர் இதன் காரணமாகவே நீண்ட நாட்களாக எச்சரிக்கைகளை வெளியிட்டு வந்தார்.

இலங்கையின் ஆட்சியாளர்கள் குறிப்பாக ராஜபக்சாக்கள் பயன்படுத்திய பலவீனமான கொள்கைகள் குறித்து அவர் கருத்து தெரிவிக்கின்றார்,

நிதியை பெறுவதற்கான வேறு வாய்ப்புகள் இல்லை என்பதை உணர்ந்ததும் அரசாங்கம் சர்வதேச நாணயநிதியத்தை அணுகியிருக்கவேண்டும் என அவர் தெரிவிக்கின்றார்.

கேள்வி - இலங்கையின் வெளிநாட்டு கடன் 51 பில்லியன் டொலர்களாக காணப்படுகின்றது ஆனால் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்குகுறிப்பாக உயிர்காக்கும் மருந்துகள் எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு அந்த நாட்டிடம் பயன்படுத்தக்கூடிய 25 பில்லியன் மாத்திரமே கையிருப்பில் உள்ளது.இது எவ்வாறு இடம்பெற்றது,நாடு வங்குரோத்து நிலையை அடைவதற்கு காரணமாக அமைந்த தவறான முகாமைத்துவம் எந்த துறைகளில் இடம்பெற்றது?

பதில் -கொவிட் 19 முடக்கலும் முற்றிலும் கொள்கைரீதியான நடவடிக்கைகள் இன்மையும் இலங்கையை வங்குரோத்து நிலைக்கு தள்ளின.

அரசாங்கம் எதனையும் செய்யாமல் சர்வதேச பொருளாதார நிலை மாறும் என காத்திருந்தது.

அவர்கள் கையிருப்பில் இருந்ததிலிருந்து பிணைமுறிகளிற்கு செலுத்தினார்கள் நாணயமாற்றுவிகிதத்தை பலவீனமான நிலையில் வைத்திருந்தார்கள் சந்தையை அணுகுவதற்கான வாய்ப்பு விரைவில் கிடைக்கும் என கருதினார்கள்.

நிலைமைமாற்றமடையும் என காத்திருந்ததால் இலங்கையிடம் முற்றாக பணம் இல்லாத நிலை உருவானது.

கேள்வி - விவசாயபொருட்கள் நிறைந்த வெப்பமண்ட நாடான இலங்கையின் மக்கள் தற்போது உணவை தவிர்க்கவேண்டிய நிலைக்கு,எரிபொருள் பற்றாக்குறை காரணமாக நீண்டதூரம் நடக்கவேண்டிய நிலைக்கு,அடிப்படை தேவைகளிற்காக கூட மனிதாபிமான உதவிகளை எதிர்பார்க்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதை முரண்நகை என தெரிவிப்பதா?உண்மையில் என்ன தவறு நடந்தது?

பதில் - நாடு தற்போது இயங்கவில்வை செயற்பாட்டில் இல்லை,டொலர் பற்றாக்குறை மிக மோசமாக உள்ளதால் உயிர்வாழ்வதற்கான அத்தியாவசிய பொருட்களை வழங்குவது கூட பிரச்சினைக்குரிய விடயமாக காணப்படுகின்றது.

கொவிட்டை கருத்தில் கொள்ளும் போது கொள்கைகளில் முற்போக்கான மாற்றங்களை மேற்கொள்ளாததும்,முன்னரே சர்வதேச நாணயநிதியத்தின் உதவியை நாடாததும் இதற்கு காரணம். நாடு வங்குரோத்து நிலையை அடைந்ததும் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு கூட நிதியை பெறுவது கடினம்.

கேள்வி - நாங்கள் சர்வதேச கடற்போக்குவரத்து பாதையில் முக்கிய பங்கை வகிக்கும் நாட்டை பற்றி பேசுகின்றோம்,இலங்கையின் பொருளாதாரத்திற்கு உதவுவதற்கு சர்வதேச நிதி அமைப்புகள் என்ன செய்யலாம்?நிதி மோசமான விதத்தில் கையாளப்பட்டுள்ளதால் நிதி வழங்குபவர்கள் என்ன நிபந்தனைகளை விதிக்கவேண்டும்.?

பதில் - நிலையான வளர்ச்சிக்கு திரும்புவதற்கான கொள்கை திட்டத்திற்கும் கடனை மறுசீரமைக்கும் திட்டத்திற்கும் ஈடாக சர்வதேச நிறுவனங்கள் இலங்கைக்கு புதிய டாலர்களை வழங்க முடியும். இருப்பினும், பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கும் பாராளுமன்றத்திற்கு முன்மொழிவுகளை எடுத்துச் செல்வதற்கும் பொறுப்பான ஒப்பீட்டளவில் நிலையான அரசாங்கம் இருக்க வேண்டும்

கேள்வி - ஏன் சில ஆய்வாளர்கள் சீனாவையும் அதன் கடன்பொறி இராஜதந்திரத்தையும் இந்த குழப்பத்திற்கு  குற்றம்சாட்டுகின்றனர்,சீனாவின் கடன் இலங்கையை பொறுத்தவரை எவ்வளவு பெரியது?

பதில் - இலங்கையின் வெளிநாட்டு கடன்களில் 15 வீதம் சீனாவிற்கானதாகயிருக்கலாம் என நாங்கள் மதிப்பிடுகின்றோம்,பிணைமுறிகள் 38 வீதம்,இலங்கை அதிகளவு கொள்வனவு செய்தது அதாவது கொடுத்தவர்கள் அதிகமாக வழங்கினார்கள் என்பது வெளிப்படையான விடயம்.

ஆனால் இறுதியில் தற்போதைய நெருக்கடிக்கு   கொள்கை செயற்பாடுகள் இல்லாமையே  கொள்கை   செயலற்ற தன்மைகாரணம், கடன்கொடுத்தவர்கள் அதிகளவு வாங்குங்கள் என கேட்கவில்லை.

கேள்வி - இலங்கையின் நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு இந்தியா என்ன பங்களிப்பை வழங்கலாம்?

பதில் - கொள்கை சீர்திருத்தங்களிற்காக, இந்த நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு  சில டொலர்களை இலங்கைக்கு வழங்கும் சர்வதேச நாணயநிதியத்தின் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்தியா விளங்கலாம்.

இலங்கையின் நெருக்கடியின் ஆழத்தை கருத்தில்கொள்ளும் நாடுகள் தனியாக உதவி வழங்குவது தீர்வை காண முயல்வது மிகவும் கடினமான விடயம்.

வங்குரோத்து நிலைமையின் போது சர்வதேச நாணயநிதியத்தின் கீழ் நிதி வழங்கப்படுவதே வழமை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04