ஜனாதிபதி கோட்டாவின் பதவி விலகல் கடிதம் சட்ட ஆலோசனைக்காக சட்டமா அதிபருக்கு அனுப்பிவைப்பு

14 Jul, 2022 | 08:46 PM
image

(இராஜதுரை ஹஷான்)

மக்கள் போராட்டம் தீவிரமடைந்ததை தொடர்ந்து ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பதவியை இராஜினாமா செய்யும் கடிதத்தை சபாநாயகருக்கு இன்றைய தினம் அனுப்பி வைத்துள்ளார்.

சட்ட ஆலோசனைகளுக்காக சபாநாயகர் குறித்த கடிதத்தை சட்டமாதிபருபக்கு அனுப்பி வைக்க தீர்மானித்துள்ளதுடன் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் பதவி விலகல் தொடர்பில் சபாநாயகர் நாட்டு மக்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்திற்கு பின்னர் பதவி காலம் நிறைவடைவதற்கு முன்னர் பதவியை இராஜினாமா செய்த முதலாவது ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ  கருதப்படுகிறார்.

போராட்டகாரர்கள் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டதை தொடர்ந்து நாட்டிலிருந்து வெளியேறிய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தனது பதவி விலகலை உத்தியோகபூர்வமாக அறிவிப்பதாக குறிப்பிட்டார்.

இருப்பினும் அவர் பதவி விலகலை சபாநாயகர் ஊடாக அறிவிக்கவில்லை. மாலைதீவு நாட்டிலிருந்து சிங்கப்பூர் நாட்டிற்கு சென்றதன் பின்னர் ஜனாதிபதி பதவி விலகலை அறிவிப்பார் என சபாநாயகர் நேற்று  இடம்பெற்ற கட்சி தலைவர் கூட்டத்தில் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ இன்றையதினம் மாலை சிங்கப்பூர் சென்றடைந்ததை தொடர்ந்து தனது பதவி விலகலை சபாநாயகர் ஊடாக அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இடம்பெற்ற எட்டாவது ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் மொட்டு சின்னத்தில் போட்டியிட்டு 52.25 சதவீத வாக்குகளை பெற்று இலங்கையின்  7 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

ஜனாதிபதி தேர்தலில் 6,924,255 வாக்குகளை பெற்று அமோக வெற்றிப்பெற்ற ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் வெற்றியை மேலும் வலுப்படுத்தும் வகையில் 2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நாடு தழுவிய ரீதியில் 6,853,693 வாக்குகளை (59.09சதவீதம் ) மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் பாராளுமுன்றில் 145 ஆசனங்களை கைப்பற்றியது.

நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் தடையாக உள்ளது என பொதுஜன பெரமுனவினர் குறிப்பிட்டதை தொடர்ந்து அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் இரத்து செய்யப்பட்டு 20 ஆவது திருச்சட்டம் பாராளுமன்றில் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. பாராளுமன்றத்தின் பெருமளவிலான அதிகாரங்கள் 20 ஆவது திருத்தம் ஊடாக ஜனாதிபதியிடம் பொறுப்பாக்கப்பட்டது.

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் பதவி காலம் நிறைவடைதற்கு முன்னர் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம், 20ஆவது திருத்தம் ஊடாக வழங்கப்பட்ட மிதமிஞ்சிய அதிகாரங்கள் அனைத்தும்  இடைப்பட்ட இரண்டரை வருட காலப்பகுதிக்குள் கேள்விக்குள்ளாக்கப்பட்டன. பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட மக்கள் ஜனாதிபதிக்கும், அவர் தலைமையிலான அரசாங்கத்திற்கும் எதிராக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டதை தொடர்ந்து  முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சரவை உறுப்பினர்கள் கடந்த மார்ச் மாதம் கூட்டாக பதவி விலகினர்.

நாட்டில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்ததை தொடர்ந்து ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ உட்பட அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜனாதிபதி செயலகத்தின் பிரதான நுழைவாயிலை மறித்து கடந்த ஏப்ரல் மாதம் 09 ஆம் திகதி ஆர்ப்பாட்டகாரர்கள் 'கோட்டா கோ கம' என பெயரிட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தனர்.

அதனை தொடர்ந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இரண்டு முறை ஸ்தாபிக்கப்பட்ட இடைக்கால அரசாங்கம் தொடர்ந்து பதவி வகிக்கவில்லை. மே மாதம் 09ஆம் திகதி நாட்டில் நிலவிய வன்முறை சம்பவங்களை தொடர்ந்து மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.

சர்வக்கட்சி தலைமையிலான அரசாங்கத்திற்கான பேச்சுவார்த்தை இடம்பெற்றிருந்த நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கரமசிங்கவை பிரதமராக ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ நியமித்தார். இருப்பினும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு வலியுறுத்தும் மக்கள் போராட்டம் நிறைவடையவில்லை.

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ- பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை பதவி விலகுமாறு வலியுறுத்தி முழு நாட்டு மக்களும் கடந்த 09 ஆம் திகதி கொழும்பை வந்தடைந்தனர். ஆர்ப்பாட்டக்காரர்கள்  ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி  செயலகம் அலரி மாளிகை ஆகியவற்றை முற்றுகையிட்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டார்கள். மக்கள் போராட்டம் தீவிரமடைந்ததை தொடர்ந்து ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ,பஷில் ராஜபக்ஷ ஆகியோர் நேற்று அதிகாலை விமான படைக்கு சொந்தமான விமானத்தின் ஊடாக மாலைதீவை சென்றடைந்தனர்.மாலைதீவில் இருந்து நேற்றைய தினம் சிங்கப்பூர் சென்றடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைபொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:18:08
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10