தனியார் பேருந்து சேவைகள் தொடர்ந்தும் பாதிப்பு

Published By: Vishnu

14 Jul, 2022 | 10:00 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

நாட்டில் தொடர்ந்து நிலவிவரும் பதற்ற நிலை மற்றும் டீசலுக்கான தட்டுப்பாடு காரணமாக தனியார் பேருந்து சேவைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றது.

இதன் காரணமாக 14 ஆம் திகதி வியாழக்கிழமை 10 வீதமான பஸ்கள் மாத்திரமே சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபையின் சுமார் 3,000 பஸ்கள்  நேற்றைய தினம் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாதாரண நாட்களில் இலங்கை போக்குவரத்து சபையால் 5000 பேருந்துகளின் சேவையில் ஈடுபடுத்தபடுத்தப்படும். ஆனால் பயணிகள் மற்றும் ஊழியர்களின் வருகை குறைவடைந்துள்ளமை காரணமாக 14 ஆம் திகதி சுமார் 3000 பஸ்கள் மாத்திரமே சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் பிற்பகலிலும் ரயில்கள் வழமை போன்று இயங்கும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்திருந்தது.  ரயில் வழமை போன்று இயங்கியதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பில் 14 ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதால் பொதுப் போக்குவரத்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே காணப்பட்டதால் மக்கள் தங்கள் வீடுகளுக்கு செல்வதில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவை தாமதம்

2024-03-29 12:00:05
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20