மாலைதீவிலிருந்து சிங்கப்பூர் சென்றார் ஜனாதிபதி கோட்டாபய

Published By: Vishnu

14 Jul, 2022 | 05:41 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ இன்று பிற்பகல் மாலைத்தீவிலிருந்து சிங்கப்பூர் நோக்கி சென்றுள்ளார்.

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ மற்றும் அவரது பாரியார் அயோமா ராஜபக்ஷ மற்றும் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் சிங்கப்பூர் ஏயார்லைன் விமானத்தில் இருந்து சிங்கப்பூர் செல்ல இருந்தனர்.

எனினும் பாதுகாப்பு காரணங்களினால் பயணிகள் விமானத்தில் சிங்கப்பூர் செல்லவிருந்த பயணம் பிற்போடப்பட்டது.

இந்நிலையில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ உபட்ட அவரது தரப்பினர் இன்று  மாலைதீவின் வெலனா சர்வதேச விமான நிலையத்திலிருந்து சவூதி ஏயார்லைன் விமானத்தில் சிங்கப்பூர் நோக்கி சென்றுள்ளனர்.

சவூதி விமான சேவைக்கு சொந்தமான எஸ்.வி.788  என்ற விமானத்தில் இவர்கள் பயணித்துள்ளனர்.

இந்த விமானம் சற்றுமுன்னர் சிங்கப்பூர் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்துள்ளது. 

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு வலியுறுத்தும் வகையில் கடந்த 9 ஆம் திகதி தலைநகரில் இடம்பெற்ற போராட்டம் தீவிரமடைந்தது.

பல்லாயிரகணக்கான போராட்டகாரர்கள் ஒன்று கூடி ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டனர்.

ஜனாதிபதி மாளிகை முற்றிகையிடப்பட்டதை தொடர்ந்து பாதுகாப்பு தரப்பினரால் ஜனாதிபதி உட்பட அவருக்கு நெருக்கமானவர்கள் பாதுகாப்பு தரப்பினரால் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

பின்னர் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ மற்றும் அவரது பாரியார் உட்பட முக்கிய தரப்பினர்கள் கடந்த புதன் கிழமை அதிகாலை 1.45 மணிக்கு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து விமான படைக்கு சொந்தமாக இராணுவ விமானத்தில் மாலைத்தீவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஜனாதிபதி மற்றும் அவரது பாரியார் உள்ளிட்டோர் அன்றையதினம் அதிகாலை 3 மணியளவில் மாலைதீவின் தலைநகரான மாலேயைச் சென்றடைந்ததாக குறிப்பிடப்படுகிறது.

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ உட்பட அவரது தரப்பினருக்கு மாலைத்தீவில் புகலிடமோ,தற்காலிக தஞ்சமோ வழங்க கூடாது என்பதை வலியுறுத்தி மாலைதீவில் வாழும் இலங்கையர்கள் 13 ஆம் திகதி புதன்கிழமை மாலைதீவில் கார்னிவல் பூங்கா அருகில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் நோக்கி பயணிக்கும் எஸ்.வி.788 விமானத்தை செயலி ஊடாக பல்லாயிரம் கணக்கானோர் கண்காணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55