பௌத்த மகா பீடங்கள் கட்சித் தலைவர்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோள் 

Published By: Digital Desk 3

14 Jul, 2022 | 02:15 PM
image

(எம்.மனோசித்ரா)

அரசியல் ஸ்திரமற்ற நிலைமை தோற்றம் பெற்றுள்ளமையினால் நாட்டின் பாதுகாப்பிற்கும், மக்களின் உயிருக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த தீர்க்கமான சந்தர்ப்பத்தில் கட்சி தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து முறையான ஆட்சியொன்றை ஸ்தாபிப்பது அவசியமாகும் என்று பௌத்த மகா பீடங்கள் வலியுறுத்தியுள்ளன.

ஆர்ப்பாட்டங்களின் போது பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட செயற்பாடுகளை தவிர்த்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ள பௌத்த மகா பீடங்கள் , சிந்தித்து பொறுப்புடன் செயற்படுமாறு நாட்டு மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளன.  

மல்வத்து , அஸ்கிரிய, அமரபுர மகா நிக்காய மற்றும் ராமாஞ்ஞ மகா நிக்காய ஆகிய பௌத்த மகா பீடங்கள் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையிலேயே இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

நாட்டில் தோற்றம் பெற்றுள்ள அரசியல் ஸ்திரமற்ற தன்மையால் தற்போது நாட்டின் பாதுகாப்பு மற்றும் மக்களின் உயிருக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மக்களின் உயிரைப் பாதுகாத்து அவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எவ்வித திட்டமிடலும் இன்றி , முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்கள் நாட்டை மேலும் அராஜக நிலைமைக்கு இட்டுச்செல்லும்.

இதனால் இந்த தீர்க்கமான சந்தர்ப்பத்தில் மக்களின் எதிர்பார்ப்பு தொடர்பில் அவதானம் செலுத்தி ஜனநாயக விழுமியத்தின் கீழ் அனைத்து கட்சி தலைவர்களும் ஒன்றிணைந்து பாராளுமன்றத்தை உடனடியாகக் கூட்டி, சர்வதேசத்தின் மத்தியில் நாட்டின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முறையான ஆட்சியொன்றை ஸ்தாபிப்பதன் அவசியத்தை நாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றோம்.

இந்த தீர்க்கமான சந்தர்ப்பத்தில் சட்டத்தின் படி, சட்டத்தின் ஆட்சியை மதித்து அமைதியான முறையில் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்த வேண்டும்.

அதனை விடுத்து பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட எந்தவொரு செயற்பாடுகளிலும் ஈடுபடாமலிருப்பதற்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே பொது மக்கள் பொறுப்புடன் சிந்தித்து செயற்பட வேண்டும்.

அத்தோடு நாட்டில் நிலவும் உண்மையான நிலைவரம் தொடர்பில் தெரிந்து கொள்வது மக்களின் உரிமையாகும். அதற்கமைய இது தொடர்பில் சுதந்திரமாக தகவல்களை வழங்குவதற்கு இடமளித்து , மக்களின் வாழ்க்கையைப் பாதுகாத்து , நாட்டில் அமைதியை நிலைநாட்டுவது பாதுகாப்பு துறையினரின் பொறுப்பாகும் என்று நாம் நம்புகின்றோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58