கொத்மலை கிண்ண இறுதிப் போட்டி : புனித பத்திரிசியார் எதிர் ஸாஹிரா 

Published By: Priyatharshan

05 Nov, 2016 | 07:06 AM
image

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி அணிக்கும் மருதானை ஸாஹிரா கல்லூரி அணிக்கும் இடையிலான 19 வயதின் கீழ் கொத்மலை கிண்ண கால்பந்தாட்ட இறுதிப் போட்டி யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் சனிக்கிழமை இரவு மின்னொளியில் நடைபெறவுள்ளது.

இப் போட்டிக்கு முன்பதாக பிற்பகல் 5 மணிக்கு நடைபெறும் மூன்றாவது இடத்தைத் தீர்மானிக்கும் போட்டியில் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி அணியை வென்னப்புவை புனித ஜோசப் வாஸ் கல்லூரி அணி சந்திக்கவுள்ளது.

கொத்மலை கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் 2014 இல் ஆரம்பமானது முதல் ஸாஹிரா அணி விளையாடும் மூன்றாவது தொடர்ச்சியான இறுதிப் போட்டி இதுவாகும். 

2014 இல் சம்பியனான ஸாஹிரா, கடந்த வருடம் இரண்டாம் இடத்தைப் பெற்றது. இம்முறை மீண்டும் சம்பியனாவதற்கு பலம்வாய்ந்த அணியாக ஸாஹிரா தென்படுகின்றது.

மறுபுறத்தில் இப் போட்டிகளில் முதல் தடவையாக  விளையாடும் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி அணி முதல் சந்தர்ப்பத்திலேயே சம்பியனாகும் நோக்கத்துடன் நாளை இடம்பெறவுள்ள இறுதிப் போட்டியில் ஸாஹிராவை எதிர்கொள்ளவுள்ளது.

எனினும் புனித பத்திரிசியார் அணி, அரை இறுதியிலும் பார்க்க சிறந்த வியூகங்களுடன் விளையாடினாலன்றி பலம் வாய்ந்த ஸாஹிராவை வெற்றிகொள்வது என்பது சுலபமல்ல.

எனவே, நாளைய போட்டி இரு அணி வீரர்களுக்கும் மிக முக்கிய போட்டியாக கருதுப்படுவதால் வெற்றி யார் பக்கம் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35