ரஷ்யாவில் 17 வயதான இளம்பெண் ஒருவர்  ஆழ்துளை கிணறு ஒன்றில் விழுந்த 2 வயது குழந்தையை துணிச்சலாக காப்பாற்றும் சம்பம் அடங்கிய காணொளி சமுக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

ரஷ்யாவில் 2 வயது குழந்தையொன்று  ஆழ்துளை கிணறு ஒன்றில் தவறி விழுந்துள்ள நிலையில், குறித்த குழந்தையின் பெற்றோர் உடனடியாக தீயணைப்பு படையினருக்கு அறிவித்துள்ளனர்.

குறித்த இடதத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் குழந்தையை மீட்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். எவ்வாறாயினும் குழந்தையை மீட்க முடியவில்லை.

இதனால் குறித்த இடத்திலிருந்த  17 வயது இளம்பெண் ஒருவரை  ஆழ்துளை கிணற்றில் இறக்கி, குழந்தையை மீட்க முடிவுசெய்துள்ளனர்.

திட்டத்தின்படி குறித்த இளம்பெண்ணை ஆழ்துளை கிணற்றில் இறக்கிய போது குறித்த பெண்ணுக்கு மூச்சுத்தினறல் ஏற்பட்டுள்ளது.

இதனால் குறித்த பெண் மேலே கொண்டுவரப்பட்டார்.

எவ்வாறாயினும் தனது முயற்சியை கைவிடாத பெண் மீண்டும் கிணற்றின் உள்ளே இறக்கப்பட்ட போது குழந்தையை மீட்டவாறு வெளியில் வந்தார்.

இந்த செயலை அனைவரும் பாராட்டியதுடன், குறித்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.