ஊரடங்கு மற்றும் நாடளாவிய ரீதியில் அவசரகாலச் சட்டம் அமுல்! ரணில் அதிரடி

Published By: Digital Desk 3

13 Jul, 2022 | 01:12 PM
image

(எம்.மனோசித்ரா)

நாடளாவிய ரீதியில் உடன் அமுலாகும் இன்று புதன்கிழமை நண்பகல் முதல்  அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதோடு , மேல் மாகாணத்தில் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டில் இல்லாத நிலையில், பதில் ஜனாதிபதி என்ற ரீதியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இவ்வாறு அவசரகால சட்டத்தையும், ஊரடங்கு சட்டத்தையும் நடைமுறைப்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு நாட்டில் வன்முறையை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் தரப்பினரை உடனடியாக கைது செய்யுமாறும், அவர்கள் பயணிக்கும் வாகனங்களை தமது பொறுப்பிலெடுக்குமாறும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாதுகாப்புபடையினருக்கு உத்தரவிட்டுள்ளார். 

அதற்கமைய ஊரடங்கு நடைமுறையிலுள்ள இந்தக் காலப்பகுதியில் அனைவரையும் அவரவர் வீடுகளிலேயே இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.

இன்று புதன்கிழமை கொழும்பில் அமைந்துள்ள பிரதமர் அலுவல வளாகத்தில் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

கடந்த 9 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் பின்னர் ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் அலரிமாளிகை என்பன ஆர்ப்பாட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டுள்ளதோடு, அவற்றிலுள்ள பெருமளவான சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்றைய தினமும் பிரதமர் அலுவல வளாகத்தில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில் அங்கு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அதற்கமைய பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தப்படுவதை தவிர்த்தல், வன்முறைகள் ஏற்படாமல் தவிர்த்தல் என்பவற்றைக் கருத்திற் கொண்டே இவ்வாறு அவசரகால சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46