தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி சென்னை அப்பல்லோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 40 நாட்களுக்கும் மேலாக வைத்தியசாலையில் தொடர் சிகிச்சையில் உள்ள அவர் விரைவில் வீடு திரும்புவார் என்ற தகவல் பரவி வருகிறது.

கடந்த சில தினங்களாக ஜெயலலிதா எம்டிசிசியூ வார்ட்டில் இருந்து சிறப்பு வார்ட்டுக்கு மாற்றப்படவுள்ளார் என்ற தகவல் வந்தது. ஆனால் அது குறித்து எந்த அறிக்கையும் வரவில்லை. ஆனால் முதல்வர் ஜெயலலிதா சிறப்பு வார்ட்டுக்கு மாற்றப்பட்டுள்ளார் என்றே தற்போது தகவல்கள் வருகின்றதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றனர்.

ஜெயலலிதாவுக்கு பொருத்தப்பட்டிருந்த செயற்கை சுவாச கருவிகள் அகற்றப்பட்டு அவர் தற்போது இயல்பாக சுவாசித்து வருவதாகவும், அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பிஸியோதெரபி சிகிச்சையில் ஜெயலலிதாவுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இதனால் முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து அப்பல்லோ வைத்தியசாலை விரைவில் அறிக்கை வெளியிட்டு முதல்வர் ஜெயலலிதா சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார் என்ற தகவலை கூறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.