மருந்துப்பொருட்களுக்கு அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக விற்பனை செய்யும் மருந்தகங்களுக்கு எதிராக முறைப்பாடு செய்ய இரண்டு விசேட தொலைபேசி இலக்கங்களை சுகாதார அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.

விலைக்குறைக்கப்பட்ட 48 மருந்து வகைகளுக்கான விலைப்பட்டியல் ஒக்டோபர் 21 ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

இதனால் மருந்து விற்பனையாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக அறவிட முடியாது.

இந்நிலையில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமான விலை அறவிடும் மருந்து விற்பனையாளர்களை கண்காணிப்பதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் விலை அதிகமாக அறவிடப்படுமாயின் மக்கள் தங்களது முறைப்பாட்டினை 0113-071-073 அல்லது 0113-092-269 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்புக்கொண்டு தெரிவிக்க முடியும் என சுகாதரா அமைச்சு தெரிவித்துள்ளது.