இலங்கைக்கான விமான சேவைகளை நிறுத்தியது ' ப்ளய் டுபாய் '

Published By: Vishnu

12 Jul, 2022 | 01:15 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாய் நகரை மையப்படுத்திய ' ப்ளய் டுபாய் ' விமான சேவை இலங்கைக்கான தனது சேவைகளை இடை நிறுத்தியுள்ளது.

கடந்த 10 ஆம் திகதி முதல் இவ்வாறு விமான சேவைகளை இடை நிறுத்தியுள்ளதாகவும் மீள அறிவிக்கப்படும் வரை இலங்கைக்கான தனது சேவைகள் இடம்பெறாது எனவும் ப்ளய் டுபாய் அறிவித்துள்ளது.

இலங்கையின் தற்போதைய நிலைமையை மிக உன்னிப்பாக அவதனைப்பதாக தெரிவிக்கும் ப்ளய் டுபாய், ஏற்கனவே விமான பயண சீட்டுக்களை பெற்றுக்கொண்ட  பயணிகளுக்கு அதற்கான கட்டணத்தை மீள செலுத்துவதாக மின்னஞ்சல் ஊடாக அறிவித்துள்ளது.

ப்ளய் டுபாய் விமான சேவையை பயன்படுத்தும் நாடுகளின் இலங்கை முக்கியமானது என அண்மையில் அந்த விமான சேவை நிறுவனம் அறிவித்திருந்த நிலையிலேயே, தற்போது அந்த சேவைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியை தளமாக கொண்ட எதிஹாட் விமான சேவை தனது சேவைகளை முற்றாக நிறுத்திக்கொள்ளவில்லை.

எவ்வாறாயினும்  எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் அபுதாபி நோக்கி பயணிக்கும் எதிஹாட் விமான சேவை விமானங்கள் இலங்கையிலிருந்து பயணத்தை ஆரம்பித்து,

இந்தியாவின் கொச்சி விமான நிலையத்துக்கு சென்று அங்கிருந்து எரிபொருளைப் பெற்றுக்கொண்டே செல்லும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

அத்துடன் தாமும் இலங்கையின் நிலைமையை மிக உண்ணிப்பாக அவதானிப்பதாக அந் நிறுவனம் அறிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராகவும், அடிப்படை சம்பளமாக...

2024-04-19 14:59:41
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04