மகன் மற்றும் மருமகளால் தாய் ஒருவர் செருப்பால் அடித்து கழுத்தைப் பிடித்து வெளியே விரட்டியடிக்கபட்ட சம்பவம் ஒன்று நேற்று பொகவந்தலாவை டின்சின் தோட்டப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த தோட்டத்தைச் சேர்ந்த 70 வயதுடைய ராசம்மா என்ற தாயே இவ்வாறு அடித்து விரட்டப்பட்டுள்ளதாக டின்சின் தோட்டமக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த தாய் கடந்த இரண்டு நாட்களாக உண்பதற்கு உணவுகூட இல்லாமல் அத்தோட்டத்திலுள்ள பால் சேகரிக்கும் நிலையத்தில் தங்கியிருக்கிறார்.

இந்நிலையில் அந்த தாயிற்கு அயலவர்களினால் உணவு வழங்கப்பட்டு வருவகின்றது.

இந்த சம்பவம் தொடர்பாக பொகவந்தலாவை டின்சின் பகுதிக்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தருக்கு அறிவிக்கபட்டதையடுத்து, குறித்த தாயை முதியோர் இல்லத்தில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை பொகவந்தலாவை பொலிஸார் ஊடாக அவர் மேற்கொள்ளவுள்ளார்.

இதுபோன்று பெற்றோர்களை துன்புறுத்தி வீட்டைவிட்டு விரட்டும் பிள்ளைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென பிரதேசமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எஸ்.சதீஸ்