லிபிய அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 239 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

லிபியாவில இருந்து ஐரோப்பாவிற்கு தஞ்சம் அடைய சென்ற அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 239க்கும் மேற்பட்ட லிபிய அகதிகள் உயிரிழந்துள்ளனதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இச்சம்பவம் உலக நாடுளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அளவுக்கு அதிகமாக அகதிகளை ஏற்றிச் சென்றதே விபத்துக்கு காரணம் என்று முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.