இடைக்கால ஜனாதிபதியாக பிரதம நீதியரசரை நியமித்து பொதுத்தேர்தலுக்கு செல்வதே சிறந்தது - பிரசன்ன ரணதுங்க

Published By: Digital Desk 5

10 Jul, 2022 | 03:57 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டுமாயின் நிலையான அரசாங்கத்தை ஸ்தாபிக்க வேண்டும்.முழு அரசியல் கட்டமைப்பையும் மக்கள் எதிர்க்கும் பின்னணியில் சர்வக்கட்சி அரசாங்கத்தை மக்கள் ஏற்பார்களா என்பது சந்தேகத்திற்குரியது.இடைக்கால ஜனாதிபதியாக பிரதம நீதியரசரை நியமித்து,பொதுத்தேர்தலுக்கு செல்வதே சிறந்த தீர்மானமாக அமையும் என ஆளும் தரப்பின் பிரதம கொறடா பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய நிலைவரம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாடு தீர்மானமிக்க தருணத்தை தற்போது எதிர்கொண்டுள்ளது.தற்போதைய நெருக்கடியான நிலைமைக்கு இதுவரையில் ஆட்சியில் இருந்த அரச தலைவர்களும்,அரசாங்கங்களும் பொறுப்புக்கூற வேண்டும்.முறைகேடான அரச நிர்வாகம் தற்போதைய சகல பிரச்சினைகளுக்கும் மூல காரணியாக உள்ளது.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியை பதவி விலகுமாறு கடும் அழுத்தம் பிரயோகிக்கப்படுகிறது.மக்களின் அபிலாசைக்கு மதிப்பளித்து நாளை மறுதினம் (புதன்கிழமை) பதவி விலகுவதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.நாட்டு மக்களை தொடர்ந்து ஏமாற்றாமல் நிலையான தீர்வு குறித்து ஆராய்வது 225 பாராளுமன்ற உறுப்பினர்களினதும் பொறுப்பாகும்.

பொருளாதார நெருக்கடி சகல பிரச்சினைக்கும் பிரதான காரணியாக உள்ளது என்பது புதிய விடயமல்ல,பொருளாதார நெருக்கடி,அரசியல் நெருக்கடியாக வியாபித்து முழு அரசியல் கட்டமைப்பையும் பலவீனப்படுத்தியுள்ளது.பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டுமாயின் அரசியல் ஸ்தீரத்தன்மை பேணப்பட வேண்டும் என சர்வதேச நிதி நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளள.

நாட்டு மக்கள் முழு அரச கட்டமைப்பையும் வெறுக்கிறார்கள்.சர்வக்கட்சி அரசாங்கம் குறுகிய காலதீர்வாக மாத்திரம் காணப்பட வேண்டும்.சகல கட்சி தலைவர்களையும் ஒன்றினைத்து ஸ்தாபிக்கும் சர்வகட்சி அரசாங்கத்தை மக்கள் ஏற்பார்களா என்பது சந்தேகத்திற்குரியது.அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் தொடர்ந்து காணப்படுமாயின் எப்பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியாது.

இடைக்கால ஜனாதிபதியாக பிரதம நீதியரசரை நியமித்து உடன் பொதுத்தேர்தலுக்கு செல்வது சிறந்த தீர்மானமாக அமையும்.நாட்டு மக்கள் தமக்கான அரசாங்கத்தை தாராளமாக தெரிவு செய்துக்கொள்ளலாம்.குறுகிய கால தீர்வு குறித்து பாராளுமன்றம் கவனம் செலுத்தாமல்,நீண்டகால தீர்வு குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58