இலங்கை ஜனாதிபதியின் மாளிகை பொது குளியலறையாக மாறுகின்றது

Published By: Rajeeban

10 Jul, 2022 | 11:47 AM
image

ஏஎவ்பி

ஜனாதிபதி பதவி விலகவேண்டும் என்ற பல மாத சீற்றத்துடனான வேண்டுகோளின் பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் சிரித்தனர் மகிழ்ந்தனர் -செல்பி எடுத்துக்கொண்டனர் தீடிரென ஜனாதிபதியின் இல்லத்திற்குள் செல்வதற்கான வாய்ப்பு கிடைத்ததால் அங்கு காணப்பட்ட நீச்சல் தடாகத்தில் நீச்சல் அடித்தனர்.

சனிக்கிழமை நூற்றுக்கணக்கான மக்கள் ஜனாதிபதிமாளிகையை கைப்பற்றினர்,இதன் மூலம் மிகமோசமான பல மாத பொருளாதார நெருக்கடி காரணமாக உருவான பொதுக்கள் அதிருப்திக்கு 

சில நிமிடங்களிற்கு முன்னரே ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச படையினரின் உதவியுடன் அங்கிருந்து தப்பிவெளியேறியிருந்தார்,அவரை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்காக அவர்கள் வானை நோக்கி எச்சரிக்கை வேட்டுக்களை தீர்த்தனர்.

அவர் அங்கிருந்து அகன்றதும் அந்த பகுதியில் - அவரது மாளிகைக்குள் கொண்டாட்ட மனோநிலை உருவானது,எரிபொருள் மின்சார தட்டுப்பாடுகள் காரணமாக பல மாதங்களாக காணப்பட்ட விரக்தியையும் சில நிமிடங்களிற்கு முன்னர் படையினருடன் இடம்பெற்ற மோதலையும் மக்கள் திரள் மறந்தது.

நாங்கள் கோத்தபாயவின் அறையிலிருக்கின்றோம்,இது அவர் விட்டுவிட்டு சென்ற  உள்ளாடை என கறுப்பு நிற உள்ளாடைகளை காண்பித்தபடி வீடியோ நேரடி ஒளிபரப்பில் இளைஞர் ஒருவர் தெரிவித்தார்,அதனை பலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்டனர்.

அவர் தனது சப்பாத்தையும் விட்டுவிட்டு சென்றுவிட்டார் என அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி மாளிகையின் வளாகத்தில்  பல ஆண்கள் தங்கள் சேர்ட்களை களைந்துவிட்டு ஜனாதிபதியின் நீச்சல் தடாகத்திற்குள் குதித்தனர்.பலர் தங்களிற்கு தெரிந்த நீச்சல் முறைகளை  பரிசீட்சித்து பார்த்தனர்.

பொலிஸாருடனான காலை மோதலி;ன் பின்னர் பல அழகுபடுத்தப்பட்டிருந்த புல்வெளிகளில் அமர்ந்திருந்தனர், காலையில் பொலிஸார் அவர்கள் மீது கண்ணீர் புகைபிரயோகத்தையும் நீர்த்தாரை பிரயோகத்தையும் மேற்கொண்டிருந்தனர்.

தடைகளை தகர்ந்தெறிந்த பின்னர் கைப்பற்றப்பட்ட பொலிஸ் வாகத்தின் உதவியுடன் உயரமான பகுதிகளில் ஏறி ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையின் வளாகத்திற்குள் நுழைந்தனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் வேகமாக முன்னேறியதும் பாதுகாப்பு பணியில் நின்றிருந்த பொலிஸாரும் படையினரும் விலகிச்சென்றனர்.

உள்ளே விசேட அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபட்டிருந்த போதிலும் ஜனாதிபதி மாளிகைக்குள் சுதந்திரமாக நடமாடியவர்களை அகற்றுவதற்கான முயற்சிகளில் அவர்கள் ஈடுபடவில்லை.

சிலர் ராஜபக்சவின் பாரிய கட்டில்கள் சோபாக்களில் அமர்ந்துகொண்டனர் உறங்கினர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதியின் சமையலறைக்குள் சென்றார்கள் அங்கு திண்பன்டங்களும் குளிர்பானங்களும் காணப்பட்டன.

நாங்கள் முடிவற்ற மின்தடையை எதிர்கொண்டுள்ள நிலையில் குளிருட்டி தொடர்ந்தும் இயங்கிக்கொண்டிருந்ததை பார்த்து ஆச்சரியமடைந்தேன் எனஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த  ஒருவர் ஏஎவ்பிக்கு தெரிவித்தார்.

நாங்கள் திருடர்களாககூடாது என அவர் குறிப்பிட்டார்.

முன்னோக்கி சென்றவேளை பல்கலைகழக மாணவர்கள் வாயிற்கதவின் உச்சியில் ஏறிய பல்கலைகழக மாணவர்ஒருவர்; விலைமதிப்பற்ற கலைப்பொருட்களின் களஞ்சியமாக உள்ள அரசகுடியிருப்பை சேதப்படுத்தவோ கொள்ளையடிக்கவோ வேண்டாம் என பொதுமக்களை உரத்தகுரலில் கேட்டுக்கொண்டனர்.

நாங்கள் கோத்தாவை திருடன் என அழைத்தோம் அவரை பதவி விலகச்செய்தோம்,தயவு செய்து மாளிகையிலிருந்து எவற்றையும் அகற்றவேண்டாம் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.

நாங்கள் ராஜபக்சாக்கள் போல திருடர்களாகயிருக்க கூடாது என அவர் தெரிவித்தார்.

முன்னர் குயின்ஸ் ஹவுஸ் என அழைக்கப்பட்ட ஜனாதிபதி மாளிகை  இலங்கைக்கு சுதந்திரம் கிடைக்கும் வரை பிரிட்டனின் ஆளுநர்களின் உத்தியோகபூர்வ இல்லமாக காணப்பட்டது.

அதன் பின்னர் அது இலங்கை ஜனாதிபதிகளின் உத்தியோகபூர்வ வாசல்ஸதலமாக கருதப்பட்டது ஆனால் அவர்கள் அதனை பேய்வீடு என கருதினார்கள் 

ஒரு ஜனாதிபதி மாத்திரமே அங்கு குறுகிய காலத்திற்கு வாழ்ந்துள்ளார், ஏனையவர்கள் அங்கு வந்து செல்பவர்களாகவே காணப்பட்டனர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22