பதவியை இராஜினாமா செய்வதாக ரணில் தெரிவிப்பு : சபாநாயகரை பதில் ஜனாதிபதியாக நியமிக்க தீர்மானம்

Published By: Digital Desk 4

09 Jul, 2022 | 06:56 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடி , தீர்க்கமான முடிவொன்றை எடுப்பதற்காக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் இன்று மாலை 4 மணிக்கு அவரது இல்லத்தில் இடம்பெற்ற விசேட கட்சி தலைவர் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

No description available.

இக்கூட்டத்தில் பிரதமர் , அநுரகுமார திஸாநாயக்க மற்றும் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டோர் மெய்ந்நிகர் ஊடாகவும் , மனோ கணேஷன் , ரவுப் ஹக்கீம், டலஸ் அழகப்பெரும, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ, சந்திம வீரக்கொடி உள்ளிட்டோர் நேரடியாகவும் கலந்து கொண்டனர்.

இதன் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவருமே பதவி விலக வேண்டும் என்று பெரும்பாலானோரால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய பிரதமர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு சர்வகட்சி ஆட்சியை பொறுப்பேற்க வழிவகை செய்யத் தயார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கட்சித் தலைவர்களிடம் தெரிவித்துள்ளார்.No description available.

நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் இந்த வாரம் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாலும், உலக உணவுத் திட்டப் பணிப்பாளர் இந்த வாரம் நாட்டிற்கு வருகை தரவுள்ளதாலும், சர்வதேச நாணய நிதியத்திற்கான கடன் நிலைத்தன்மை அறிக்கை வரவுள்ளதாலும் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், எதிர்க்கட்சித் தலைவர்களின் இந்த பரிந்துரையை அவர் ஏற்றுக்கொண்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை ஜனாதிபதி  பிரதமர் உடனடியாக பதவி விலக வேண்டும், சபாநாயகர் ஆகக்கூடியது 30 நாட்களுக்கு பதில் ஜனாதிபதியாக செயற்பட வேண்டும் , ஜனாதிபதியொருவரை பாராளுமன்றம் தெரிவு செய்ய வேண்டும் மற்றும் அதன் பின்னர் குறுகிய காலத்திற்குள் தேர்தலுக்குச் செல்ல வேண்டும். அது வரையில் பாராளுமன்றம் தெரிவு செய்பவர் ஜனாதிபதியாக பதவி வகிப்பார் என்ற தீர்மானங்களே கட்சி தலைவர் கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38