இ.போ.ச ஊழியர்களுக்கு எரிபொருளை விநியோகிக்குமாறு போக்குவரத்து அமைச்சர் ஆலோசனை

Published By: Digital Desk 4

08 Jul, 2022 | 10:05 PM
image

(இராஜதுரை ஹஷான்)

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் சேவைக்கு சமுகமளிப்பதற்கு தேவையான எரிபொருளை இலங்கை டிபோ ஊடாக விநியோகிக்கும் நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன, போக்குவரத்து அமைச்சின் செயலாளர் மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவருக்கு ஆலோசனை வழங்கினார்.

வியாபாரிகளின் செயற்பாடுகளினால் அரசாங்கத்தின் கொள்கையை மாற்றிக்கொள்ள  நேர்ந்துள்ளது - பந்துல குணவர்தன | Virakesari.lk

பொது போக்குவரத்து சேவையில் தனியார் பேரூந்துகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அரச பேரூந்துகளும் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டால் முழு நாடும் ஸ்தம்பிதமடையும் ஆகவே பொது மக்களின் நலனை கருத்திற்கொண்டு பணிப்புறக்கணிப்பில் ஈடுப்படுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு போக்குவரத்து அமைச்சர் தொழிற்சங்கத்தினரிடம் வலியுறுத்தினார்.

சேவைக்கு சமுகமளிக்க தேவையான எரிபொருளை பெற்றுத்தருமாறு வலியுறுத்தி இலங்கை போக்குவரத்து சபையின் பேரூந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் நேற்று காலை முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கும்,தொழிற்சங்கத்தினருக்கும் இடையில் நேற்று மாலை போக்குவரத்து அமைச்சில் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

இதன்போது போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டதாவது,

கொவிட் -19 பெருந்தொற்று தாக்கத்தின் போதும்,பொது போக்குவரத்து சேவையின் ஏனைய தரப்பினர் பணிபுறக்கணிப்பில் ஈடுப்பட்ட போதும் இலங்கை அரச பேரூந்து சபையின் ஊழியர்கள் பொது மக்களின் நலனை கருத்திற்கொண்டு பொறுப்புடன் செயற்பட்டமை வரவேற்கத்தக்கது.

நாட்டில் எரிபொருள் விநியோக கட்டமைப்பு எந்தளவிற்கு நெருக்கடிக்குள்ளாகியுள்ளது என்பதை அனைவரும் நன்கு அறிவோம்.பொது போக்குவரத்து துறை எரிபொருள் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளது.தனியார் பேரூந்து சேவை வரையறுக்கப்பட்டுள்ள நிலையில் அரச பேரூந்துகளும் பணி புறக்கணிப்பில் ஈடுப்பட்டால் முழு நாடும் ஸ்தம்பிதடையும்.

ஊழியர்கள் சேவைக்கு சமுகமளிக்கும் போது எதிர்கொள்ளும் நெருக்கடியினை நன்கு விளங்கிக்கொள்ள முடிகிறது. வலுசக்தி அமைச்சருடன் பேச்சுவார்த்தையை மேற்கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலாவது எரிபொருளை பெற்றுக்கொடுக்க எதிர்பார்த்துள்ளேன்.

நாடு தற்போது எதிர்கொண்டுள்ள மோசமான நிலைமையினை கருத்திற்கொண்டு பொது மக்களின் நலனுக்காக பணிபுறக்கணிப்பில் ஈடுப்படாமல் சேவையில் ஈடுப்படுமாறு கேட்டுக்கொள்கிறேன்.கையிருப்பில் உள்ள குறைந்தப்பட்ச எரிபொருளை போக்குவரத்து சேவை ஊழியர்களுக்கு வழங்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என்றார்.

இலங்கை டிபோ ஊடாக ஊழியர்களுக்கு எரிபொருளை வழங்கும் நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு போக்குவரத்து அமைச்சின் செயலாளர்,இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கின்சிலி ரணவக்க ஆகியோருக்கு போக்குவரத்து அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14