கொழும்பில் ஆர்ப்பாட்டங்கள் அமைதியான முறையில் இடம்பெறவும் பாதுகாப்புத்தரப்பை விலகியிருக்குமாறு ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரகம் வலியுறுத்தல்

Published By: Vishnu

08 Jul, 2022 | 11:39 PM
image

(நா.தனுஜா)

கொழும்பில் நாளை 09 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்டங்கள் வன்முறைகளின்றி அமைதியான முறையில் இடம்பெறுவது அவசியம் என்று வலியுறுத்தியிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம், அப்போராட்டங்களைத் தடுப்பதிலிருந்து விலகியிருக்குமாறு பாதுகாப்புத்தரப்பினரை வலியுறுத்தியுள்ளது.

 நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், அதற்குக் காரணமான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைப் பதவி விலகுமாறு வலியுறுத்தி கடந்த மூன்று மாதகாலமாக நாடளாவிய ரீதியில் பொதுமக்களால் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. அவற்றில் சில ஆர்ப்பாட்டங்களிலும், அதனைத்தொடர்ந்தும் வன்முறைச்சம்பவங்கள் வெடித்ததுடன் உயிரிழப்புக்களும் பதிவாகியிருந்தன.

இவ்வாறானதொரு பின்னணியில் ஜனாதிபதியைப் பதவி விலகுமாறுகோரி இன்றைய தினம் நாடு முழுவதும் பாரிய ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டிருக்கும் பின்னணியில், அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமை மற்றும் வன்முறைகளிலிருந்து விலகியிருப்பதன் அவசியம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்றைய தினம் பாரியளவிலான ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுவதற்கு திட்டமிடப்பட்டிருக்கும் நிலையில், அவற்றைத் தடுப்பதிலிருந்து விலகியிருக்கும் அதேவேளை, வன்முறைகளைத் தடுப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளை வலியுறுத்துகின்றோம்.

அத்தோடு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்குமாறும் மருத்துவ மற்றும் ஏனைய மனிதாபிமான அத்தியாவசியசேவைகளுக்கு இடையூறு ஏற்படுத்தவேண்டாம் என்று போராட்டங்களை ஏற்பாடு செய்பவர்களிடமும் ஆதரவாளர்களிடமும் கேட்டுக்கொள்கின்றோம்.

மேலும் போராட்டங்களைக் கண்காணிக்கின்ற மற்றும் அறிக்கையிடுகின்ற உரிமை மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு இருக்கின்றது என்பது குறித்தும், அவ்வுரிமை எவ்வித இடையூறுகளுமின்றி பாதுகாக்கப்படவேண்டும் என்பது குறித்தும் பாதுகாப்புத்தரப்பினருக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்குமாறு அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்கின்றோம். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38