ஜப்பானில் நீண்டகாலம் பிரதமராக பதவி வகித்தவர்-சர்ச்சைக்குரிய தேசியவாதி- ஷின்சோ அபே

Published By: Rajeeban

08 Jul, 2022 | 04:07 PM
image

ஜப்பானில் நீண்டகாலம் பிரதமராக பதவிவகித்தவரான -ஷின்சோ அபே  தனது போர்க்குணம் மிக்க வெளிவிவகார கொள்கைகளிற்காகவும் தனக்கே உரித்தான பாணியிலான பொருளாதார மூலோபாயங்களிற்காகவும் பெயர் பெற்றவர்.

அவரது பொருளாதார மூலோபாயத்தின் சிறப்பு காரணமாக அந்த கொள்கைகள் அபோனெமிக்ஸ் என அழைக்கப்பட்டன.

பெரும்பாலான விளக்கங்களின்படி ஒரு பழமைவாத தேசியவாதியான அபே (67)லிபரல் ஜனநாயக கட்சிக்கு இரண்டு தேர்தல்களில் வெற்றியை பெற்றுக்கொடுத்தவர்.

அவரது முதலாவது பதவிக்காலம் சர்ச்சைக்குரியதாகவும் குறுகியகாலம் மாத்திரமே நீடித்ததாகவும் காணப்பட்டது - ஒரு வருடத்திற்கும் சற்று அதிகம்.

எனினும் 2012 ஆச்சரியமளிக்கும் விதத்தில் மீள்வருகை புரிந்த அபே 2020 வரை பதவியில் நீடித்தார்- உடல்நல பாதிப்புகளால் பதவி விலகினார்.

அபே தனது இரண்டாவது பதவிக்காலத்தை ஆரம்பித்தவேளை ஜப்பானின் பொருளாதாரம்  மந்தநிலையில் காணப்பட்டது.

ஷின்சோ அபே நாணயக்கொள்கைகளில் தளர்வுகளை அறிவித்தார்,கட்டமைப்பு மாற்றங்களை முன்னெடுத்தார். வீழ்ச்சியடைந்துகொண்டிருந்த பொருளாதாரத்தை மறுபடி வளர்ச்சி நிலைக்கு கொண்டுவந்தவர் என பாராட்டுப்பெற்றார்.

2011 இல் டொகோக்குவில் பூகம்பமும் சுனாமியும் ஏற்படுத்திய பாரிய அழிவிலிருந்து ஜப்பானை மீட்டார்,(20,000 பேர் உயிரிழந்தனர்,புஷிமா அணுஉலை சிதைந்தது)

2020இல் பெருங்குடல்புண்ணிணால் பாதிக்கப்பட்டதாக அறிவித்து பதவி விலகினார்,2007ம் ஆண்டிலும் இதேநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தே அபே பதவி விலகினார்.

அவரது நண்பரும் கட்சி உறுப்பினருமான யொசிகிடே சுகா புதிய பிரதமராக பதவியேற்ற போதிலும் சி;ன்சோ அபே தொடர்ந்தும் ஜப்பான் அரசியலில் செல்வாக்கு மிக்கவராக காணப்பட்டார்.

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் சின்டாரே அபேயின் மகனும் முன்னாள் பிரதமர் நொபுசுக்கே கிசியின் பேரனுமான ஷின்சோ அபே அரசியல் அரசகுடும்பத்தை சேர்ந்தவர்.

1993 இல் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட அபே 2005 இல் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

அவரது வளர்ச்சி மிகவேகமானதாக காணப்பட்டது,2006 இல் அபே பிரதமரானார். இதன் மூலம் யுத்தத்திற்கு பிந்திய ஜப்பானில் இளம் வயதில் பிரதமரானவர் என்ற  பெருமைக்குரியவரானார்.

எனினும் அரசாங்கம் ஓய்வூதிய ஆவணங்களை இழந்தமை உட்பட பல சர்சைகள் குற்றச்சாட்டுகள் அபேயின் அரசாங்கத்தின் முன்னேற்றத்தை பாதித்தன.

2007ஜூலையில்  இல் மேல்சபைக்கான தேர்தலில் அவரது கட்சி மோசமான தோல்வியை  தழுவியது, இதனை தொடர்ந்து செப்டம்பரில் தனது உடல்நிலையை காரணம் காட்டி அபே பதவியை இராஜினாமா செய்தார்.

2012 இல் உடல்நிலைபாதிப்புகளில் இருந்து மீண்டுவிட்டதாக தெரிவித்து மீண்டும் அரசியலில் ஈடுபட்ட அபே 2014 -2017 இல் தெரிவு செய்யப்பட்டு - ஜப்பானில் நீண்ட நாள் பிரதமர் பதவியில் நீடித்தவர் என்ற பெருமைக்குரியவரானார்.

மக்கள் செல்வாக்கில் வீழ்ச்சிகள் ஏற்பட்ட போதிலும் கட்சியில் அவருக்கு காணப்பட்ட செல்வாக்கு காரணமாக அவரை எதிர்க்க எவரும் இல்லாத நிலை காணப்பட்டது.

அவர் மூன்றாவது தடவையும் கட்சியின் தலைவராக பதவி வகிப்பதற்கு ஏற்ற வகையில் கட்சியி;ன் யாப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டன.

சர்ச்சைக்குரிய தேசியவாதி

ஜப்பானின் பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார கொள்கைகள் குறித்த தனது போர்க்குணம் மிக்க கொள்கைகளிற்காக பெயர் பெற்றவர் ஷின்சோ அபே 

ஜப்பானின் யுத்தத்திற்கு பிந்தைய அரசமைப்பில் மாற்றங்களை மேற்கொள்ளவேண்டும் என அவர் வலியுறுத்திவந்தார்.

இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் அமெரிக்கா தயாரித்த அரசமைப்பை இரண்டாம் உலக யுத்தத்தில் ஜப்பானி;ற்கு ஏற்பட்ட அவமானகரமான தோல்வியை நினைவுபடுத்தும் ஒன்றாக ஜப்பானின் கென்சவேர்ட்டிவ்கள் கருதுகின்றனர்.

ஷின்சோ அபே; தேசிய வாத கொள்கைகள் காரணமாக அடிக்கடி சீனா தென்கொரியாவுடன் சர்ச்சைகள் உருவானமை குறிப்பிடத்தக்கது.

2013 இல் அபே இரண்டாம் உலக போருக்கு முன்னும் பின்னும்ஜப்பானின் இராணுவத்துடன் தொடர்புடைய டோக்கியோவின் யாசுகுனி வழிபாட்டுதலத்திற்கு  விஜயம் மேற்கொண்டமை சர்ச்சையை ஏற்படுத்தியது.

அவர் மீண்டும் மீண்டும் அங்கு சென்றமை ஜப்பானின் இடதுசாரிகளிற்கு சீற்றத்தை ஏற்படுத்தியது. இரண்டாம் உலக யுத்தத்தின்போது ஜப்பான் இராணுவத்தினர் புரிந்த அநீதிகளிற்கு  அபே வெள்ளையடிக்க முயல்கின்றார் என அவர்கள் கருதினார்.

2015 இ;ல் ஜப்பான் தன்னை  பாதுகாத்துக்கொள்ளவதற்கும் தாக்குதலிற்கு உள்ளான சகாக்களை பாதுகாத்துக்கொள்வதற்கும் வெளிநாடுகளில் படையினரை வைத்திருப்பதற்கான கூட்டு தற்பாதுகாப்பிற்கான உரிமையை அபே முன்வைத்தார்.

ஜப்பானின் அயல்நாடுகளும் பொதுமக்களும் எதிர்ப்பை வெளியிட்ட போதிலும் ஜப்பான் நாடாளுமன்றம் அதனை ஏற்றுக்கொண்டது.

ஜப்பான் இராணுவத்தை அங்கீகரிக்கும் வித்தில் அரசமைப்பை முழுமையாக மாற்றும் அவரது பாரிய இலக்கு இன்னமும் நிறைவேறாததாக காணப்படுகின்றது

பிபிசி

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04
news-image

ஒற்றுமை பற்றி பேசிப்பேசியே பிளவுபட்ட முஸ்லிம்...

2024-03-25 14:21:50
news-image

பிசுபிசுத்த நம்பிக்கையில்லா பிரேரணை

2024-03-25 14:16:49