(ரொபட் அன்டனி)

உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு  பிரிட்டனின்  ஐக்கிய நாடுகள் சபை மற்றும்  பொதுநலவாயம்  தொடர்பான அமைச்சரும் பிரிட்டன் பிரதமரின் விசேட பிரதிநிதியுமான   பரனோஸ் ஏன்லி எதிர்வரும்  ஞாயிற்றுக்கிழமை இலங்கை வரவுள்ளார். 

இந்த விஜயத்தின்போது   பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளிவிவகார அமைச்சர்  மங்கள சமரவீர   எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான   இரா. சம்மந்தன் உள்ளிட்ட  பல்வேறு தரப்பினரையும் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.  

வடக்கு விஜயம் செய்து  அங்குள்ள நிலைமைகளை ஆராயவுள்ள  பிரிட்டன் அமைச்சர்  வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரன்  வடக்கு ஆளுநர்  ரெஜினோல்ட் குரே   ஆகியோரையும்  சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். 

அத்துடன் கொழும்பில் சிவில் சமூக பிரதிநிதிகளை சந்தித்து பேச்சு நடத்தவுள்ள பிரிட்டன் அமைச்சர்  ஜனநாயகம்  மற்றும்  நல்லிணக்க செயற்பாடுகள்  தொடர்பில் ஆராயவுள்ளார்.  

இலங்கையில் ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் பலப்படுத்துவது குறித்தும் இலங்கை விஜயத்தின்போது அவர்    வலியுறுத்தவுள்ளதுடன்  நல்லிணக்க செயற்பாடுகளில்  பெண்களின் பங்களிப்பு  தொடர்பாகவும்  ஆராயவுள்ளார்.