திருடனை பிடிக்காது திருட்டை கண்டுப்பிடித்தவனை அரசாங்கம் பின் தொடர்கின்றது. எனவே மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி அரசியல் மற்றும் சுய உறவு முறைகளில்  இருந்து விடுப்பட்டு நாட்டின் எதிர்கால நலன் கருதி முறிகள் மோசடி தொடர்பில் செயற்பட வேண்டும் என தெரிவித்துள்ள பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், மத்திய வங்கி தகவல் கசிவு தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு செய்த ஆளுநர் முறிகள் மோசடி தொடர்பில் மௌனித்து செயற்படுவது சந்தேகங்களை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டார் 

பொரெல்லையில் அமைந்துள்ள ஸ்ரீ வஜிராஸ்ரம பௌத்த நிலையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும்போதே பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.