ஜனாதிபதி கோட்டாபயவை பதவி நீக்கி சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்போம் - ஐக்கிய மக்கள் சக்தி சூளுரை

Published By: Digital Desk 3

07 Jul, 2022 | 09:17 PM
image

(எம்.மனோசித்ரா)

அரசாங்கத்திற்கு எதிராக நாளை சனிக்கிழமை முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி முழுமையான ஆதரவை வழங்கும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவியிலிருந்து விலகச் செய்து அனைவரும் ஏற்றுக் கொள்ளும் சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க வேண்டும். சர்வகட்சி அரசாங்கத்திற்கு எம்மால் விடுக்கப்பட்ட அழைப்பினை ஜே.வி.பி. மறுத்துள்ளமை பிரச்சினைக்குரிய விடயமாகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (6) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உக்ரேன் மீது குண்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதைப் போன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகத்தை மேற்கொள்கின்றனர். 

ஹிருணிகா என்ற பெயரைக் கேட்டதும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு பயம் ஏற்படுகிறது. அரசியல் நோக்கத்திற்காக நாம் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவில்லை. கோட்டபய ராஜபக்ஷ பதவி விலகாமல் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முடியாது.

எனவே அவரை பதவியிலிருந்து நீக்கி சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க வேண்டும். இதற்காக நாம் பாராளுமன்றத்திலுள்ள சகல கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருக்கின்றோம்.

எனினும் ஜே.வி.பி. அந்த அழைப்பினை நிராகரித்துள்ளது. உண்மையில் அவர்களது நிகழ்ச்சி நிரல் என்பது எமக்கு புரியவில்லை. 9 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு முழுமையான ஆதரவை வழங்குவோம்.

9 ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவியிலிருந்து விலகச் செய்ய வேண்டும். அதனைத் தொடர்ந்து அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க வேண்டும்.

மக்கள் எதிர்ப்புக்களால் அரசியலிலிருந்து பின்வாங்கிய பஷில் ராஜபக்ஷவிற்காகவே தம்மிக பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். ஆரம்பத்தில் மக்கள் எதிர்ப்புக்கள் தீவிரமடைந்த போது ரணில் என்ற இரும்பு காவலரணை அமைத்து ராஜபக்ஷ குடும்பம் தன்னை பாதுகாத்துக் கொண்டது.

தற்போது ரணில் மீதான எதிர்ப்புக்களும் வலுப்பெற்றுள்ளமையால் , அவருக்கு பதில் வேறு ஒருவரை நியமிப்பதற்கு பஷில் திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார்.

சஜித் பிரேமதாச தலைமையிலான அரசாங்கம் அமைக்கப்பட்டால் , நிச்சயம் ராஜபக்ஷாக்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படும் என்ற அச்சத்தினாலேயே அவர்கள் எமக்கு வாய்ப்பளிக்க அஞ்சுகின்றனர்.

ஜே.வி.பி. சர்வகட்சி அரசமைப்பதற்கான அழைப்பினை நிராகரிக்கின்றமையானது பிரச்சினைக்குரிய விடயமாகும். அநுரகுமார திஸாநாயக்க பிரதமர் பதவியை ஏற்பதற்கு தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அவர் உள்ளடங்களாக 3 பாராளுமன்ற உறுப்பினர்களை மாத்திரம் வைத்துக் கொண்டு எவ்வாறு அரசாங்கத்தை அமைக்க முடியும்? அதற்கு ஏனைய கட்சிகளின் ஒத்துழைப்பும் அவசியமாகும் என்பதை அவர் உணர வேண்டும்.

தற்போது சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான சிறந்த அடித்தளம் இடப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி , தமிழ் தேசிய கூட்டமைப்பு , அரசாங்கத்திலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் , அரசாங்கத்திற்குள்ளிருக்கும் ஆனால் ராஜபக்ஷ குடும்பத்தை விரும்பாத உறுப்பினர்கள் , கோப் குழு உறுப்பினர் சரித ஹேரத் மற்றும் சம்பிக ரணவக்க உள்ளிட்ட சிரேஷ்ட உறுப்பினர்கள் இதற்கு ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளனர் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21