உக்ரைன் மோதலில் இந்தியாவின் நிலைப்பாடு சரியானது - வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

Published By: Vishnu

07 Jul, 2022 | 12:28 PM
image

உக்ரைன் மோதலில் இந்தியா 'சரியான போக்கை' எடுத்துள்ளது என்றும் விரோதங்கள் ஆபத்தை மட்டுமே  ஏற்படுத்தும் அளவிற்கு அதிகரிக்காமல் தடுப்பதே மிக முக்கியமானது என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

'மோடி@20: 'ட்ரீம்ஸ் மீட் டெலிவரி' என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பெப்ரவரியில் உக்ரைனில் ரஷ்யா தனது இராணுவ நடவடிக்கையை தொடங்கியதிலிருந்து இந்தியா 'சரியான போக்கை' கையாண்டது. 'மிக அவசரமான பிரச்சினை, விரோதம் தீமை மட்டுமே செய்யும் அளவிற்கு அதிகரிப்பதைத் தடுப்பதே நோக்கமாகியது என்றார்.

உக்ரைன் சம்பவத்தை மகாபாரதத்தின் சூழ்நிலைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்ததாகவும் கூறினார். போரைத் தடுக்க இந்தியா அனைத்தையும் செய்துள்ளதாகவும், பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திரத்தைப் பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

உக்ரைன் நெருக்கடிக்குப் பிறகு ஏற்பட்ட எரிபொருள், உணவு மற்றும் உரத் தட்டுப்பாடு காரணமாக ஏற்பட்ட நிலைமையை  இந்தியா சமாளித்து வருவதாக வெளியுறவு அமைச்சர் தெரிவித்தார்

பிரதமர் மோடி ஒரு தேசியத் தலைவராக இருக்க வேண்டும் என்பதற்கான டெம்ப்ளேட்,' என்று அவர் மேலும் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47