கடவுச்சீட்டைப் பெற வரிசையில் காத்து நின்ற பெண் குழந்தையை பிரசவித்தார்!

Published By: Digital Desk 3

07 Jul, 2022 | 10:44 AM
image

கடவுச்சீட்டைப்பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருந்த பெண்ணொருவர் குழந்தையை பிரசவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு, குடியகல்வு திணைக்களத்திற்கு முன்பாக கடவுச்சீட்டு பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த பெண்ணொருவரே இவ்வாறு குழந்தையை பிரசவித்துள்ளார்.

குறித்த பெண் வரிசையில் நின்ற போது பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, அங்கிருந்த இராணுவத்தினரால் பொரளை - காசல்வீதி மகளிர் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லும் வழியில் அவர் குழந்தையை பிரசவித்துள்ளார்.

குழந்தையை பிரசவித்த பெண் நேற்று முதல் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்காக குறித்த இடத்தில் காத்து நின்றுள்ளதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

ஹட்டன் பகுதியைச் சேர்ந்த  26 வயதான பெண்ணொருவரே இவ்வாறு குழந்தையை பிரசவித்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, பல கர்ப்பிணிப்பெண்கள் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ள வரிசையில் காத்திருப்பதை அவதானிக்க முடிந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58