நீர்கொழும்பு மற்றும் கட்டுநாயக்க பிரதேசங்களில் திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த யுவதி ஒருவரை கட்டுநாயக்க பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கட்டுநாயக்க - எவரிவத்தைப் பிரதேசத்திலுள்ள கடையொன்றுக்கு குழந்தையுடன் வந்த பெண்ணின் பணத்தைத் திருட முற்பட்ட போது நேற்று மாலை  கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கல்பிட்டி, கந்தக்குளிப் பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய குருகுலசூரிய சானிகா தில் ருக்ஷி என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். 

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திலுள்ள தொழிற்சாலையொன்றில் வேலை செய்யும் குறித்த யுவதி,

தன்னுடன் வேலை செய்யும் சக நண்பிகளுடன் விடுமுறை நாட்களில் நீர்கொழும்பு இரவு நேர சந்தைக்கு வருவதை இவர் வழக்கமாகக் கொண்டுள்ளார். 

இதன்போது, பணம் மற்றும் தொலைபேசிகளை பெண்களிடம் மாத்திரம் திருடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். 

யுவதியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் 35 ஆயிரம் ரூபாய் பெறுமதியுடைய தொலைபேசி 3, அடையாள அட்டைகள் 11, வீசா 8, சேமிப்பு புத்தகம் 4  உட்பட பல்வேறு பொருட்களைக் பொலிஸார் மீட்டுள்ளனர். 

குறித்த யுவதியின் அறையில் 70 செம்போ போத்தல் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

மேலும் ஓலிவ் காய் போத்தல், கஜூ, பாலாடைக்கட்டி போன்றன விலைக்கூடிய பொருட்களை அடிக்கடி குறித்த யுவதி பயன்படுத்திவுள்ளதாக தெரியவந்துள்ளது.

இவ்வாறான பொருட்களை கொள்வனவு செய்வதற்காகவும் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்காகவும் திருட்டு செயற்பாடுகளில் குறித்த யுவதி ஈடுப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாணைகளில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.