மத்திய வங்கி பிணைமுறி நடவடிக்கையை பிரதமர் திட்டமிட்டே செய்துள்ளார் 

Published By: Ponmalar

03 Nov, 2016 | 02:59 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

பிரதமரை பதவியில் இருந்து நீக்கி கோப் அறிக்கை தொடர்பாக விசாரணை நடத்த ஜனாதிபதி நம்பிக்கையான குழுவொன்றை நியமிக்கவேண்டும். அத்துடன்  மத்திய வங்கி பிணைமுறி நடவடிக்கையை பிரதமர் மிகவும் திட்டமிட்டே செய்துள்ளார் என லங்கா சமசமாஜ கட்சியின் செயலாளர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

லங்கா சமசமாஜ கட்சி தலைமைக்காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

 நிதி தொடர்பான தீர்மானங்களை நிதி சபைதான் முடிவெடுக்கவேண்டும். பிரதமரின் செயலாளர் அந்த சபையில் உறுப்பினராக இல்லை. நிதி அமைச்சின் செயலாளரே அதில் உறுப்பினராக இருக்கின்றார். இதனால்தான் பிரதமர் தனது நண்பரான அர்ஜுன் மஹேந்திரனை மத்திய வங்கி ஆளுனராக நியமித்தார். ஏனெனில் மத்திய வங்கி ஆளுனர்தான் நிதிசபையின் பிரதானியாக இருக்கின்றார். அதனடிப்படையிலேயே இந்த பிணைமுறி கொடுக்கல் வாங்கல் இடம் பெற்றுள்ளது. அத்துடன் மத்திய வங்கி பிணைமுறி சம்பவம் காரணமாக நாட்டுக்குள் முதலீடுசெய்திருந்த வெளிநாட்டவர்கள் நாட்டைவிட்டு வெ ளியேறுகின்றனர். இதனால் தற்போதைக்கு 2  பில்லியன் டொலர் நாட்டிலிருந்து வெளியாகியுள்ளது.

எனவே மத்திய வங்கி பிணைமுறி தொடர்பாக கோப் அறிக்கையில் பிரதமர் சம்பந்தம் இல்லையென்று எவ்வாறு தெரிவிக்க முடியும். பிரதமரே இதனை திட்டமிட்டு மேற்கொண்டுள்ளார். அர்ஜுன் மஹேந்திரனின் நியமனம்கூட சட்டவிரோதமானது. அவர் சிங்கப்பூர் பிரஜை. அதனால் ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரத்தைகொண்டு பிரதமரை பதவியில் இருந்து நீக்கி கோப் அறிக்கை தொடர்பாக விசாரணை நடத்த நம்பிக்கையான குழுவொன்றை நியமிக்கவேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19