எரிபொருள் வரிசையில் இடம்பெறும் மரணங்கள் மக்களை வலுவிழக்கச்செய்து மேற்கொள்ளப்படும் படுகொலைகளாகும் - துஷார இந்துனில்

Published By: Vishnu

06 Jul, 2022 | 09:05 PM
image

(நா.தனுஜா)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 05 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்திற்கு வருகைதந்தபோது நாட்டின் தற்போதைய நிலைவரம் தொடர்பில் ஏதேனுமொரு சிறந்த விடயத்தைக் கூறுவார் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாக இருந்தது.

ஆனால் அதற்காக அவர் வரவில்லை. மாறாக அரசியலமைப்பின் பிரகாரம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பாராளுமன்றத்திற்கு வருகைதந்து, தனது தொழிலைப் பாதுகாத்துக்கொள்ளவேண்டும் என்பதே அவரது எண்ணமாக இருந்திருக்கின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் சுட்டிக்காட்டினார். 

அதுமாத்திரமன்றி எரிபொருள் வரிசையில் இடம்பெறும் மரணங்கள் வெறும் மரணங்கள் அல்ல.

மாறாக அவர்களை நீண்டநேரம் வரிசைகளில் காத்திருக்கச்செய்து, உடலியல் ரீதியிலும் உளவியல் ரீதியிலும் வலுவிழக்கச்செய்து மேற்கொள்ளப்படுகின்ற படுகொலைகள் ஆகும்.

இந்த மரணங்களுக்கும், இதனால் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கும் வழங்கப்படவுள்ள இழப்பீடு என்ன? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். 

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை (6) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது: 

முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாஸவிற்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டுவரப்பட்டிருந்த வேளையில் அவர் பாராளுமன்றத்திற்கு வருகைதந்தபோது அப்போதைய அமைச்சர் ரிச்சட் பத்திரண ஜனாதிபதி பிரேமதாஸவிற்குக் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.

இருப்பினும் அந்த அசாதாரண சூழ்நிலையில்கூட ஜனாதிபதி ஆர்.பிரேமதாஸ பாராளுமன்றத்தில் மிகுந்த துணிச்சலுடன் உரையாற்றிவிட்டு அங்கிருந்து சென்றார்.

 ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு வருகைதருவதென்பது விசேடமானதொரு விடயமாகும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறையேனும் ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு வருகைதரவேண்டும் என்று அரசியலமைப்பிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று முன்தினம் பாராளுமன்றத்திற்கு வருகைதந்தபோது நாட்டின் தற்போதைய நிலைவரம் தொடர்பில் ஏதேனுமொரு சிறந்த விடயத்தைக் கூறுவார் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாக இருந்தது.

ஆனால் அதற்காக அவர் வரவில்லை என்றும், வெறுமனே 'நான் இன்னும் இருக்கின்றேன். எங்கும் ஓடி ஒழியவில்லை' என்பதைக் காண்பிப்பதற்குமே வந்திருக்கின்றார் என்றே நாங்கள் கருதுகின்றோம்.

அரசியலமைப்பின் பிரகாரம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பாராளுமன்றத்திற்கு வருகைதந்து, தனது தொழிலைப் பாதுகாத்துக்கொள்ளவேண்டும் என்பதற்காகவே அவர் நேற்று முன்தினம் பாராளுமன்றத்திற்கு வந்திருக்கின்றார். 

தற்போதைய சூழ்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வீதியில் தனியாக நடந்து சென்றாலோ அல்லது ஏதேனுமொரு எரிபொருள் நிரப்புநிலையத்திற்கு அண்மையில் இறங்கினாலோ அவருக்கு என்ன நேரும் என்பதைக் கூறமுடியாத நிலையேற்பட்டிருக்கின்றது.

இதுவரையான காலமும் நாடளாவிய ரீதியில் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு வாக்களித்த மக்கள் அவருக்கெதிராக வீதிகளில் இறங்கி போராடியதன் மூலம் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். ஆனால் இப்போது பாராளுமன்றத்திலும் அவருக்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கின்றது. நிறைவேற்றதிகாரத்திற்கு எதிரான அரசியலமைப்பின் விரோதத்தை அவரால் எப்போது புரிந்துகொள்ளப்போகின்றார்?

 எரிபொருளுக்கான வரிசையில் 05 ஆம் திகதி 14 ஆவது மரணம் பதிவாகியுள்ளது. இது வெறும் மரணங்கள் அல்ல. மாறாக அவர்களை நீண்டநேரம் வரிசைகளில் காத்திருக்கச்செய்து, உடலியல் ரீதியிலும் உளவியல் ரீதியிலும் வலுவிழக்கச்செய்து மேற்கொள்ளப்படுகின்ற படுகொலைகள் ஆகும். இந்த மரணங்களுக்கும், இதனால் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கும் வழங்கப்படவுள்ள இழப்பீடு என்ன? என்று கேள்வி எழுப்பினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55