சுதந்திரக் கட்சி தலைமையில் ஆட்சி அமைப்பேன் : சு.க. நிகழ்வில் ஜனாதிபதி உறுதி

Published By: MD.Lucias

03 Nov, 2016 | 02:22 PM
image

தோல்விகளை சந்தித்து பிளவடைந்து காணப்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை தூய்மையாக்கி  எதிர்காலத்தில் மக்களின் பலத்தை கொண்டு  எமது கட்சியின் தலைமையில் அரசாங்கம் அமையும் என இவ்விடத்தில் உறுதிபூணுகிறேன் என்று  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் புதிய அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளும் ஆரம்பகட்ட நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் இன்று காலை மஹரகமவில் நடைபெற்றது. இந்நிகழ்விலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளும் ஆரம்ப நிகழ்வை கட்சியின் மத்திய இடமாக விளங்கும் கொழும்பின் மஹரகம பகுதியில் நடத்துவோம் என கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. 

முக்கிய பல காரணங்களை கருத்தில் கொண்டே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்தும் இந்த நிகழ்வை முன்னெடுத்துள்ளோம்.

நாட்டு மக்களையும் நாட்டையும் பாதுகாக்க வேண்டும் என்பதே எமது முதல் இலக்கு.

தோல்வியடைந்து பிளவுபட்டு காணப்படும் கட்சியை ஒன்றிணைத்து கட்சியை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வது, கட்சியின் தோல்விக்கான காரணங்களை இனங்கண்டு மக்களுக்கு தெளிவுப்படுத்தல், களவு, கொள்ளை என தீய செயல்கள் அற்ற தூய்மையான பாதையில் பயணித்தல், மக்கள் பலத்துடன் கூடிய சுதந்திரக் கட்சியின் அரசாங்கத்தை அமைத்தல் என பல முக்கிய காரணங்களுக்காகவே கட்சியில் புதிய அங்கத்தவர்களை இணைத்து கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளோம்.

எதிர்காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசாங்கத்தை அமைப்பதற்கு முன்னர் மக்கள் பலத்தை கொண்டு கட்சியை வலிமைப் பெறச் செய்ய வேண்டும். முன்னைய கால ஆட்சியின் அனுபவங்களை கொண்டு கட்சியை தூய்மைப்படுத்த வேண்டும்.

ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகிய பிரதான இரு கட்சிகள் காணப்பட்ட போதும் பல புதிய கட்சிகள் தோற்றம் பெற்றன. எனினும் அக் கட்சிகள் மீது மக்கள் மத்தியில்  நம்பிக்கை ஏற்படவில்லை. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51