சொகுசு வாகனத்தில் கேரளா கஞ்சா கடத்திய ஒருவர் கைது

Published By: Digital Desk 5

06 Jul, 2022 | 02:38 PM
image

கற்பிட்டியிலிருந்து கொழும்பிற்கு சொகுசு வாகனத்தில் கேரளா கஞ்சா கடத்திய சந்தேகநபர் ஒருவர் இன்று (06) கைது செய்யப்பட்டுள்ளார்.

கற்பிட்டி கொழும்பு பிரதான வீதியின் கரம்பை பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் கடற்படையிரின் உதவியுடன் குறித்த வாகனத்தை மறித்து சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். 

இதன்போது குறித்த வாகனத்தில் 212 கிலோ கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதாக நுரைச்சோலைப் பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.  

கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு வேனையும் புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை நுரைச்சோலைப் பொலிஸார் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58
news-image

மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய...

2024-04-16 11:15:15
news-image

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் மீண்டும்...

2024-04-16 11:14:10
news-image

இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380...

2024-04-16 11:03:37
news-image

தமிழர்களை பயங்கரவாதிகளென அடையாளப்படுத்தி முன்னெடுக்கும் அரசியல்...

2024-04-16 10:56:51
news-image

மடாட்டுகமவில் யானை தாக்குதலுக்கு இலக்காகி 62...

2024-04-16 11:04:45
news-image

புத்தாண்டு காலத்தை இலக்காகக் கொண்டு நாடளாவிய...

2024-04-16 10:57:11