மத்திய வங்கி பிணைமுறி மோசடியைப்போன்று எரிவாயு மோசடி இடம்பெற இடமளியோம் - ஐக்கிய மக்கள் சக்தி

Published By: Digital Desk 5

06 Jul, 2022 | 09:22 PM
image

(நா.தனுஜா)

நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில் எரிவாயுவை அதிக விலைக்கு இறக்குமதி செய்வதற்கு ஆட்சியாளர்கள் இடமளித்திருப்பதாகக் குற்றஞ்சாட்டிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், இம்மோசடிக்கு எதிராக வெகுவிரைவில் கோப்குழுவின் ஊடாக உரிய சட்டநடவடிக்கையை முன்னெடுப்பதற்குத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் (06) புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

அதிக விலைக்கு எரிவாயு இறக்குமதி இடம்பெறுவது குறித்த தகவல்களை நாம் வெளிப்படுத்தியிருந்தோம். அதனைத்தொடர்ந்து இவ்விடயம் தொடர்பில் ஆராயுமாறு கோப் குழுவின் தலைவர் சரித்த ஹேரத்திடம் கடிதம் மூலம் வேண்டுகோள்விடுத்திருந்தோம்.

அதன்படி பாராளுமன்றத்தில் கோப்குழு கூடியது. இருப்பினும் அதன் விசாரணைகள் எமக்கு மிகுந்த வேடிக்கையாகவே இருந்தது.

பொருட்களைக் குறைந்த விலைக்கு இறக்குமதி செய்வதற்கான வாய்ப்பு காணப்படுகின்ற போதிலும், அதிக விலைக்கு இறக்குமதி செய்வதற்கு ஆட்சியாளர்கள் இடமளிப்பது ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படமுடியாத விடயமாகும்.

கடந்த தடவை இடம்பெற்ற மத்திய வங்கி பிணைமுறி மோசடியைப்போன்று இம்முறை எரிவாயு மோசடி இடம்பெறுவதற்கு எம்மால் ஒருபோதும் இடமளிக்கமுடியாது.

 எனவே எரிவாயு இறக்குமதியுடன் தொடர்புபட்டதாக லிட்ரோ நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட விலைமனுக்கோரல்கள் மற்றும் அதனைத்தொடர்ந்து இறக்குமதி செய்யப்பட்ட விலைகள் என்பன குறித்த கணக்காய்வாளர் நாயகத்தின் மதிப்பீட்டு அறிக்கை இன்னும் இருவாரங்களில் சமர்ப்பிக்கப்படும்.

அதனடிப்படையில் கோப்குழுவின் ஊடாக மேற்கொள்ளத்தக்க சட்டரீதியான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு நாம் தயாராக இருக்கின்றோம் என்று தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04