4 வது கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுங்கள் ! சுகாதார அமைச்சு மக்களிடம் கோரிக்கை

Published By: Vishnu

05 Jul, 2022 | 09:02 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

உலகளாவிய ரீதியில் மீண்டும் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பல நாடுகளும் தற்போது சுகாதார வழிமுறைகள் நடைமுறைப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது.

இந்நிலையில் நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று பரவலடையும் வாய்ப்புகள் உள்ளதாகவும் அதனை கட்டுப்படுத்தும் வகையில் முதற்கட்டமாக 20 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் நான்காவது தடுப்பூசியை முறையாக பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

05 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன இவ்வாறு தெரிவித்தார்.

 இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

உலகளாவிய ரீதியில் கொவிட் தொற்று பரவல் காரணமாக பல்வேறு நாடுகள் முடங்கியிருந்தன. இலங்கை பல்வேறு சவால்களுக்கு மத்தியில் கொவிட் தொற்று பரவலை கட்டுப்படுத்தியிருந்தது.

இதற்கு முதன்மை காரணம் கொவிட் தொற்று தடுப்பூசிகள் நாட்டு மக்களுக்கு முறையாக பெற்றுக்கொடுத்த மையாகும். அதன் காரணமாக நாம் அதில் இருந்து மீள முடிந்தது.

இந்நிலையில், தற்போது பல நாடுகளில் கோவிட் தொற்று பரவும் அபாயம் தோற்றம் பெற்று இருக்கிறது. குறித்த நாடுகள் கொவிட் தொடர்பான கட்டுப்பாடுகள் மீளவும் நடைமுறைப்படுத்தி வருகிறது.

இலங்கையில் எதிர்வரும் நாட்களில் கொவிட் தொடர்பான அவதானம் செலுத்த வேண்டும்.

 இதற்கமைவாக, முறையாக கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டவர்கள் 4 வது தடுப்பூசியும் பெற்றுக்கொள்ளவும். மேலும் கொவிட் தடுப்பூசியின் முதல் இரு மாத்திரைகளை பெற்றுககொள்ளதவர்களும மற்றும் 3 வது மாத்திரையையும் முறையாக பெற்றுக்கொள்ளுங்கள்.

 அதற்கமைவாக கொவிட் தடுப்புக்கான 4 வது கொவிட் தடுப்பூசியை அருகில் உள்ள வைத்தியசாலைகள், தடுப்பூசி வழங்கும் மத்திய நிலையங்கள் ஊடாக பெற்றுக்கொள்ளலாம். இது தொடர்பில் குறித்த சுகாதார ஊழியர்களுடன் கலந்துரையாடுவதன் மூலம் அங்கு சென்று உரிய நேரத்தில் அதை பெற்று கொள்ளுங்கள் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02