டிசம்பர், ஜனவரியில் அரிசித் தட்டுப்பாடு ஏற்படலாம் : தவிர்க்க முழு முயற்சியில் அரசாங்கம் - மஹிந்த அமரவீர

Published By: Digital Desk 5

05 Jul, 2022 | 03:54 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் எதிர்வரும் டிசம்பர் அல்லது ஜனவரிலேயே அரிசிக்கான தட்டுப்பாடு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதனை அடிப்படையாக்க கொண்டு தற்போதிலிருந்தே அரிசியை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு (05)செவ்வாய்கிழமை இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

கடந்த பெரும்போகத்தில் சுமார் 40 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக கடந்த மாதம் வரை 375 000 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது சந்தைகளில் அரிசியின் விலைகளை முகாமைத்துவம் செய்வதற்காக மேலும் அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளது. அரிசி மற்றும் நெல் என்பவை பதுக்கப்படுகின்றமையின் காரணமாகவே இந்த நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டியுள்ளது.

எவ்வாறிருப்பினும் சிறுபோகத்திற்கு 275 000 ஹெக்டயரில் விளைச்சலை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த போதிலும் , உலக உணவு தட்டுப்பாடு , உள்நாட்டில் உணவு தட்டுப்பாடு என்பவை தொடர்பில் முன்னறிவிக்கப்பட்டமையினாலும் , உரம் வழங்கப்படும் என்று உறுதியளித்தமையினாலும் சுமார் 400 000 ஹெக்டயர் நிலப்பரப்பில் நெற் பயிர்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எதிர்வரும் டிசம்பர் அல்லது ஜனவரி மாதங்களிலேயே அரிசி குறைவடையக் கூடும் என்று மதிப்பிப்பட்டுள்ளது. இதனை அடிப்படையாக்க கொண்டு தற்போதிலிருந்தே அரிசியை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகளை வர்த்தகத்துறை அமைச்சு முன்னெடுத்துள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48