சர்வகட்சி அரசாங்கத்திற்கு அவசியமில்லை : 6 மாதங்களுக்குள் நாடு வழமைக்குத் திரும்பும் - மஹிந்த அமரவீர

Published By: Digital Desk 5

05 Jul, 2022 | 03:50 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் தற்போதிருப்பது சர்வகட்சி அரசாங்கமே ஆகும். எனவே தற்போது புதியதொரு சர்வகட்சி அரசாங்கத்திற்கான தேவை கிடையாது. 

எதிர்வரும் 6 மாதங்களுக்குள் பிரதமர் நாட்டை வழமை நிலைமைக்கு கொண்டு வருவார் என்று அமைச்சரவை இணை பேச்சாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். 

எனவே குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக அதிகார மோகத்தின் பின்னால் ஓடுவதை விடுத்து அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு (05)செவ்வாய்கிழமை இடம்பெற்றது. 

இதன் போது , கடந்த வாரம் சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்குமாறு மகா சங்கத்தினர் வலியுறுத்தியிருந்த விடயம் தொடர்பில் கேள்வியெழுப்பப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் போதே சாளர் மஹிந்த அமரவீர மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

யார் எதனைக் கூறினாலும் நாட்டில் தற்போதிருப்பது சர்வகட்சி அரசாங்கமே ஆகும். ஒரு சிலரின் விமர்சனங்களுக்காக இது சர்வகட்சி அரசாங்கம் அல்ல என்று கூற முடியாது. இன்றும் நாம் ஏனைய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கின்றோம். 

அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோருகின்றோம். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற போது , பல தரப்பினர் ஒத்துழைப்பு வழங்குவதாக கடிதம் மூலம் அறிவித்தனர். அவ்வாறு அறிவித்தவர்கள் இப்போது தமது ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும்.

நாட்டின் எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்து அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் இந்த பொறுப்பினை ஏற்க வேண்டும். 

அரசியல் செய்வதற்கும் நாடு என்ற ஒன்று இருக்க வேண்டும். எனவே தற்போது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக செயற்பட்டுக் கொண்டிருக்காமல் , அதிகார மோகத்தின் பின்னால் ஓடிக் கொண்டிருக்காமல் ஒன்றிணைந்து ஒத்துழைப்புக்களை வழங்குமாறு அனைவருக்கும் அழைப்பு விடுகின்றோம்.

புதிய பிரதமர் பதவியேற்று 6 வாரங்களே ஆகின்றன. அன்று 8 மணித்தியாலங்களாகக் காணப்பட்ட மின்துண்டிப்பு இன்று 3 மணித்தியாலங்களாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எரிவாயு கொள்வனவிற்கான நிதி சேமிக்கப்பட்டுள்ளது. 

மருந்து தட்டுப்பாட்டுக்கு படிப்படியாக தீர்வு காணப்பட்டுள்ளது. உரப்பிரச்சினையை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

எனவே 6 மாத கால அவகாசத்தை இந்த அரசாங்கத்திற்கு வழங்க வேண்டும். அதற்குள் பிரதமர் நாட்டை வழமைக்கு கொண்டு வருவார் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44